உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/563

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

546

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

பெருநெடுங் குன்றம் விலையோ கருதிலெம் பெண்கொடிக்கே”

எனவும்,

66

யா. வி. 15. மேற்.

காய்ந்துவிண் டார்நையக் காமரு கூடலிற் கண்சிவந்த வேந்துகண் டாயென்ன வெள்வளை சோரக் கலைநெகிழப் போந்துகண் டாரொடும் போந்துகண் டேற்கவன் பொன்முடிமேற் போந்துகண்டாளென்று போந்ததென் மாட்டோர் புறனுரையே

எனவும்,

66

யா. வி. 53. மேற்.

'திண்டேர் வயவரைச் சேர்வைவென் றானன்ன தேங்கவுண்மா வண்போ தமன்ற வழைநிழல் நீக்கிய வார்சிலம்ப ! நண்போ நினையிற்பொல் லாதது ; நிற்க; என் னன்னுதலாள் கண்போல் குவளை கொணர்ந்ததற் கியாதுங்கைம் மாறிலமே!”

எனவும் இவற்றுட் கண்டு கொள்க.

(கலி விருத்தம்)

"முன்றில் எங்கும் *முருகயர் பாணியும்

சென்று வீழரு வித்திரள் ஓசையும் வென்றி வேழ முழக்கொடு கூடிவான் ஒன்றி நின்றதி ரும்மொரு பாலெலாம்

என்னும் சந்தத்து ச

நேரசை

னோரெழுத்து ஆயினவாறு.

- யா. வி. 96. மேற்

சூளாமணி. 13.

முதலாய் வருமடி பதி

நிரையசை முதலாய் வருமடி, பன்னிரண்டு எழுத்தாம்.

வரலாறு:

(கலி விருத்தம்)

66

'அணங்க னாரன ஆடல் முழவமும்

கணங்கொள் வாரணக் கம்பலைச் செல்வமும் மணங்கொள் வார்முர சும்வயல் ஓதையும்

இணங்கி எங்கும் *இருக்கையந் நாடெல்லாம்’

சூளாமணி 15

என இதுனுள் நிரையசை முதலாய் வரும் அடி பன்னிரண்டு எழுத்தாய் வந்தவாறு கண்டு கொள்க.

சிந்தாமணி, சூளாமணி, குண்டலகேசி, நீலகேசி, அமிர்தபதி என்ற இவற்றின் முதற்பாட்டு வண்ணத்தான் வருவனவற்றில் நேரசை முதலாய்வரின், ஓரடி பதினான்கு (பா. வே) *முருகியப். *இருக்குமொர் மாடெலாம்.