உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/578

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பருங்கலம்

561

66

“அம்பு தைத்த விலங்கர வித்தன”

எனவும்,

“வாளும் வாளியுங் கோத்தெறிந் திட்டன”

6 எனவும்,

6

“சிலீமுகம் பாய்தரு குஞ்சி யாயினார்

எனவும்,

“களிறும் வந்தன கண்டும்வந் தனரோ” எனவும்,

“அரையர் கோனயி ராவண மேறினான்”

எனவும் இவற்றை நாற்கால் உச்சரித்து, ஏக பாதம் ஆமாறு கண்டு கொள்க.

யானே

எழு கூற்றிருக்கையாவது, ஏழு அறை ஆக்கி, முறை 1 'குறுமக்கள் முன்னின்றும் புக்கும் பேர்ந்தும் 2விளையாடும் பெற்றியான் வழுவாமை ஒன்று முதலாக ஏழிறுதியாக முறையானே பாடுவது.

வரலாறு:

(இணைக்குறள் ஆசிரியப்பா)

“ஒருபொருட் கிருதுணி புரைத்தனை யொருகா

லிருபிறப் பாளர்க்கு மூவமிழ் தாக்கி

யீரறம் பயந்த வோரரு ளாழியை

யிருமலர் நெடுங்க ணரிவையர் தம்மொடு மூவகை யுலகி னால்வகைத் தேவரு மும்மையி னிறைஞ்சு மீரடி யொருவனை யிருவினை பிரித்து மூவெயின் முருக்கி நாற்கதி தவிர்த்த வைங்கதித் தலைவ! நான்மறை யாள ! மும்மதிற் கிழவ ! இருகுண மொருமையிற் றெரிவுறக் கிளந்த விருசுடர் மருட்டு முக்குடைச் செல்வ! நால்வகை வருணமு மைவகைக் குலனு மாறறி மாந்தர்க் கறிவுற வகுத்தனை யைந்நிற நறுமலர் முன்னுற வேந்தி

நாற்பெரும் படையொடு மும்முறை வலங்கொண் டிருகையுங் கூப்பி யொருமையின் வணங்கி

யரசர் நெருக்குறூஉ முரசுமுழங்கு முற்றத்

1. சிறார்கள். 2. அறைகீறி விளையாடும் 'கிளித்தட்டு' என்னும் ஆட்டத்தைக் கருதுக.