உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/580

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1.

யாப்பருங்கலம்

மேன்முகக் கபால மேந்தினை; நூலின் முப்புரி மார்பினை; மூவா மேனியை; இருவரை குடையா வேந்திய வாற்ற லொருபெருங் கடவு ளொருவ னாயினை; ஆங்குநிற் காணா

திருவரு மூவுல கியைந்துடன் றிரிதர நாற்றிசை

யைம்பெருங் குன்றத் தழலாய்த் தோற்றினை; ஆறுநின் சடைய தைந்துநின் றுறையே; நான்குநின் வாய்மொழி; மூன்றுநின் கண்ணே; இரண்டுநின் படையே; ஒன்றுநின் னேறே; ஒன்றியல் காட்சி யுமையவ ணடுங்க விருங்களிற் றுரிவை போர்த்தனை; நெருங்கிய முத்தீ நான்மறை யைம்புல னடக்கிய வறுதொழி லாளர்க் குறுதுயர் தீர்த்தனை; ஏழிய லின்னரம் பியக்கினை; தாழா வாறின் னமிழ்தம் பயந்தனை யைந்தினில் வீறுயர் கோவை விழுத்தக வேந்தினை; ஆல நீழ லருந்தவர்க் கறநெறி

நால்வர் கேட்க நன்கினி துரைத்தனை; நன்றியின்.

முந்நீர்ச் சூர்மா முரணறக் கொன்றங்

கிருவரை யெறிந்த வொருவன் றாதையை; ஒருமிட றிருவடி வாக்கினை; தரும

மூவகை யுலகுட னுணரக் கூறினை;

நால்வகை யிலக்கண விலக்கிய நலம்பட மொழிந்தனை;

ஐங்கணைக் காமற் காய்ந்தனை;

அறுவகைச் சமயமு நெறியுளி வகுத்தனை;

ஏழி னோசை யிராவணன் பாடத்

தாழாக் கேட்டவன் றலைநனி பொருந்தி

யாறிய சினத்தை யாகி யைங்கதித்

இப்பாடல் ஒன்றுமுதல் ஏழு முடிய ஏறி ஏறி, யிறங்கி ஒன்றில் நின்றது.

563

2. இது நக்கீரர் பாடிய திருவெழுகூற்றிருக்கை. பதினோராந் திருமுறை அச்சுப்பிரதியிற் காணப்படும் பாடம் இதனின் மிகவும் வேறு பட்டுள்ளமை ஒப்பு நோக்கி யறிக.