உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/581

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

564

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

தேரொடு மற்றவன் செல்கென விடுத்தனை; நாற்றோ ணளனே நந்திபிங் கிருடியென் றாற்றற் பூத மூன்றுடன் பாட

விருகண் மொந்தை 'யொருகண் கொட்ட மட்டவிழ் கோதை மலைமகள் காண நட்ட மாடிய நாத னீயே;

அதனால்,

மண்டிணி ஞாலத்து மன்னுயிர்க் கெல்லா மூழி நின்னடி யேத்தி நின்றபல் லூழியும் பொன்னுல கெய்துவர் காண்பர் அதனால்,

அறியேன் சொன்ன வறிவில் வாய்மொழி வறிதெனக் கொள்ளா யுலகம் வேண்டும் வெறிகமழ் கொன்றையொடு வெண்ணில வணிந்து கீதம் பாடிய வண்ணநின்

992

பாதம் பரவுதுஞ் சென்னியிற் பணிந்தே”

எனவும் இவை எழுகூற்றிருக்கை.

காதை கரப்பு என்பது, ஒரு பாட்டினுள் மற்றொரு பாட்டுக்கு எழுத்து உளவாய்ச் சொற்புகாமே பாடுவது.

வரலாறு:

(நேரிசை வெண்பா)

“பல்லார்க்கு மீயும் பரிசிற் கொடைத்தடக்கை

மல்லார் மணிவரைத்தோள் வண்கோசன் - மல்லலந்தார் செஞ்சொற் செருந்தைதன் றென்னுறந்தை யென்றாளும் வஞ்சிக் கொடிமருங்கின் வந்து

இதனுட்போந்த செய்யுள்:

99

(குறள் வெண்பா)

1“எல்லார்க்கு நன்றாம் பணித லவருள்ளுஞ் செல்வர்க்கே செல்வந் தகைத்து

திருக்குறள் 125.

என இக்குறள் வெண்பாவின்கண் நேரிசை வெண்பாவின் எழுத்து உளவாய்ச் சொற்புக்கிலாமை எழுதித் தெரிந்து கொள்க.

1. 'கே' என்னும் உயிர் மெய்யெழுத்து எடுத்துக்காட்டுப் பாடலில் இல்லையாயினும் 'கோ' இருத்தலால் காலை விலக்கிக் கொண்டார். எகர உயிர், உயிர் மெய்யோடு (யெ) இணைந்துள்ளது.