உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/582

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பருங்கலம்

565

கரந்துறை பாட்டு என்பது, ஒரு பாட்டுச் செவ்வே எழுதினால், அதனை ஈற்று நின்று மொழிக்கு முதலாயின எழுத்துத் தொடங்கி, ஒன்று இடையிட்டு எழுத்துக் கொள்ள, மற்றொரு பாட்டுப் போதுவது.

வரலாறு:

(நேரிசை ஆசிரியப்பா)

66

'காண்கவினன் காரோர் திரைக நல்ல

பரம்புவாய் கானலம் விடுதிசை சோரல்மா

போரளிக் கொருங்குதோ லினங்கோ ளோகுமெண்

வாயக லிலமே னுள்ளார் வார்கலைக்

கூவீ வார்ந்தார்த் தேறுநற் றுளிக்கணங் கருவிகதிர் கோளாய் தாதேர்ந் தாடுந் தேர்வ திற்றெகின் கடவிட் டேகா காசி லெழிலிய போமே

யாடுசெவி நோன்றா ளானை யாடினனே’

இதனைக் கீழ்மேலாக ஒன்றிடையிட்டு எழுதப் போந்த செய்யுள்,

66

(நேரிசை வெண்பா)

ஆளான் விடுமே யழிசிகாட் டன்றெதிர்ந்தார்

தாளார் கருங்களிற்றுத் தார்வீக்க

வாளா

னுலகவா மெங்கோன தோங்கொளிபோல் சோதி

விலகாவாம் பல்கதிரோன் விண்"

என வந்தவாறு கண்டு கொள்க.

தூசங்கொளல் என்பது, ஒருவன் ஒரு வெண்பாச் சொன்னால், அதன் ஈற்றெழுத்தே ஈறாக, அதன் முதல் எழுத்தே முதலாக முதலாக மற்றொரு வெண்பா ஈற்றினின்று மேற்பாடுவது.

வாவனாற்றி என்பது, ஓர் எழுத்துக் கொடுத்தால், அது முதலாக ஈற்றடி பாடி; பின்னும் ஓர் எழுத்துக் கொடுத்தால், எருத்தடி பாடி; மற்றோர் எழுத்துக் கொடுத்தால், இரண்டாமடி பாடி; பின்னும் ஓர் எழுத்துக் கொடுத்தால், முதலடி பாடிப் பொருள் முடிய எதுகை வழுவாமற் பாடுவது.