உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/584

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பருங்கலம்

567

'கூடசதுர்த்தமாவது, நான்காமடிக்கு எழுத்து முதல்

மூன்றடியுள்ளும் பெருக்கிக் கொள்ளப் பாடுவது.

வரலாறு:

66

(கட்டளைக் கலித்துறை)

'கருமால் வினைகள்கை யேறிச் செடிசெய்து காறடப் போய் அருமா நிரயத் தழுந்துதற் கஞ்சியஞ் சோதிவளர் பெருமான் மதிதெறு முக்குடை நீழற் பிணியொழிக்குந் திருமால் திருந்தடிக் காளா யொழிந்ததென் சிந்தனையே”

எனக் கொள்க.

2கோமூத்திரி என்பது, இரண்டு வரியாக எழுதி, மேலும் கீழும் ஒன்று இடையிட்டு வாசித்தாலும் அதுவேயாவது.

வரலாறு:

(வஞ்சி விருத்தம்)

"மேவார் சார்கை சார்வாகா

மாவார் சார்கை சார்வாமா?

காவார் சார்கை சார்வாகா மாவார் சார்கை சார்வாமா?'

எனவும்,

“பரவிப் பாரகத் தார்பணி யுங்கழ

லிரவி யீர்ந்தண் வலம்புரி மாலையே விரவிப் போரவைத் தார்துணி வெங்கழ லிரவி யீர்ந்தண் வலம்புரி மாலையே'

99

எனவும் கொள்க. பிறவும் வந்தவழிக் கண்டு கொள்க.

ஓரினத்தெழுத்தால் உயர்ந்த பாட்டு

ரெழுத்தினாலேயும்,

பாடுவது.

1.

ஒருசார்

என்பது.

இனத்தினாலேயும்

கூடம் மறைவு. சதுர்த்தம் நான்கடிக் கூட்டம். இது 'கூட சதுக்கம்' என்றும்

வழங்கப்பெறும். தண்டி. 97.

-

2. “பசுவானது நடந்துகொண்டே சிறுநீர் விடும்போது, அந்நீர் ஒழுகிய தாரையானது இவ்வாறே மேலும் கீழும் நெளிந்த வடிவமாய் இருக்கும்; அதுபற்றியே இதற்குக் ‘கோமூத்திரி' எனப் பெயர் ஏற்பட்டது” தண்டி. 97. (கோ- பசு)