உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/588

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரலாறு:

யாப்பருங்கலம்

(நிலைமண்டில ஆசிரியப்பா)

"மனங்கனிந் தன்ன மண்மிசைத் தோன்றிப் பனங்கனி நிறத்த பரூஉத்தாள் முழுமுதல் நார்பொதி வயிற்றி னீர்பொதி மென்முளை தந்துநிறுத் தன்ன தோற்றமொடு கவின்பெறத் திரிந்துவிட் டன்ன திண்கெழு நுண்சுருள் ஊழி நூழிலை யுயரிய வரைபுரை கலிங்க மேய்ப்ப *வாகிய நெகிழ்ந்த வாளினஞ் கருக்கின் அவ்வயி றழுங்கச் சூல்சுமந் தெழுந்த செம்மூக் கணிகுலை மூங்கா மூக்கெனத் தோன்றியாங் கெய்தி *அலரங் கோதை யாயிழை மகளிர் பரிசர மேய்ப்பப் பலபோது பொதுளி நாய்சிரித் தன்ன தோற்றமோ டுடும்பின் தோலுரித் தன்ன பூம்படு பட்டைக் கிளிச்சிற கேய்க்கும் பாவையம் பசுங்காய் இழுதி னன்ன இன்கனி ஏந்தி

வாழைதன் னகலிலை மறைக்கும் ஊரன் முரண்கொள் யானை முத்துப்படை அழுங்க அரண்கொள் மாக்களிற் றோன்றும் நாடன் அன்புதர வந்த என்புருகு பசலை

தணிமருந்த தறியாள் அன்னை உருவுகிளர் அந்தளி, ரென்னுமென் றடமென் றோளே

என வரும். பிறவும் அன்ன.

571

  • சித்திரப்பா என்பது, நான்கு கூடின எல்லாம் பத்தாகவும் மூன்று கூடின வெல்லாம் பதினைந்தாகவும், பிறவாற்றானும் எண் வழுவாது பாடுவது.

வரலாறு:

(நேரிசை ஆசிரியப்பா)

“ஒருதிரட் பிண்டிப் பொன்னெயில் மூன்றின் ஈரறம் பயந்த நான்முக அண்ணல்)

(பா. வே) *வாய. *அதிரலங்கள், ஆலரங். *சித்திரக்கா.

(10)