உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/589

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

572

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

மூவகை உலகிற்கும் ஒரு பெருங் கடவுள்

(10)

நால்வகை யோனியுள் இருவினை கடிந்து

முந்நெறி பயந்த செந்நெறி ஒருவன்

நால்வகை அளவையும் இருவகைப் பண்பும்

(10)

ஒன்ற உரைத்த முக்குடைச் செல்வன்

ஈரடி பரவினர் என்ப

பேரா* நானெறி பெறுகிற் போரே”

(10)

து

இது நான்கு புணர்ந்து கூடியவெல்லாம் பத்தாகிய சித்திரப்பா. இதனை நான்கு வரியும் முறையே எழுதிக் கண்டு கொள்க.

(நேரிசை வெண்பா)

66

‘இருவரமாம் ஏழுநாள் ஆறமர்ந்தான் கோயில்

ஒருவனையே நாடிய போந்தேம் - ஒருவனும்

எண்கையான் முக்கணான் நான்முகத்தான் ஒன்பானோ

டைந்தலைய நாகத் தவன்”

திருப்பாமாலை.

இஃது இணைந்து மூன்று கூடினவெல்லாம் பதினைந்தாகிய சித்திரப்பா. இதனை ஈசானன் திசை முதலாக எட்டுத் திசை மேலும் நிறுத்தி, நடுவே பின் ஐந்து நிறுத்திவிடுவது.

2

9

7

6

53

1

8

பிறவும் அன்ன.

4

  • விசித்திரப்பா என்பது, எங்கும் ஏழறையாகக் கீறி, மேலை ஒழுங்கினுள் மொழிக்கு முதலாயின எழுத்து ஒரு பொருள் பயக்க நிறுவி அவ்வெழுத்துக்களை ஒழுங்கும் கண்ணறையும் படாமே நிறுவி, ஓரெருத்துக்கு ஓரடியாக வானும் ஒரு சீராகவானும் முற்றுப் பெறப் பாடுவது.

எழுத்து நிறுவுதற்கு இலக்கணம்: ஒருவன் பாண்டவர் யானைக்கொம்பே புள்ளித்தாய்க் கண்ணன்றோடு திசையே எனக் கொள்க. நான்காவது முதலா நான்கிறுதியாக அதன் மூன்று முதலாக முடிவது எனவும் கொள்க. அமிதபதி கவி என வரும் பிறவும் அன்ன.

(பா. வே) *நன்னெறி. *விசித்திரக்கா.