உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/591

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

574

வரலாறு:

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

(வஞ்சி விருத்தம்)

“நீகாவா மாமா வாகாநீ

தாமாவா தாதா வாமாதா வாவாகோ தாதா கோவாவா

மாதாதா மாமா தாதாமா

எனவும்,

“பீநீகா மாமா காநீபீ

நீகாமா வாவா மாகாநீ

காமாவா கோகோ வாமாகா மாவாகோ தாதா கோவாமா'

எனவும்,

“மாநீகா மாமா காநீபீ

நீகாமா வாவா மாகாநீ காமாவா கோகோ வாமாகா மாவாகோ தாதா கோவாமா

எனவும்,

6

‘மாமாதா நீநீ தாமாமா

மாதீயா காகா யாதீமா தாயாவே டாடா வேயாதா நீகாடா யாயா டாகாநீ"

எனவும் கொள்க.

இப்பெற்றியே எல்லா எழுத்தும் மொழிக்கு முதலா யினவே நிறுவி, ஓரெழுத்துக்கு ஓரடியாகப் பாடிப்பொருள் முடிப்பனவும் சருப்பதோபத்திரம் எனப்படும். அவையும் வந்தவழிக் கண்டு கொள்க.

எழுத்து வருத்தனமாவது, ஓரெழுத்து முதலாக 'ஒன்று தலைச்சிறந்து ஏறிய எழுத்துக்களால் முறையே பொருள் பயக்கச் சொல்லுவது.

1.

2.

266

(நேரிசை வெண்பா)

கூர்ப்பதனை ஓரெழுத்தால் என்சொல்லும் ? துய்ப்பதற்குப் பேர்த்தெழுத்தொன் றிட்டாற் பெயரென்னாம் ? - பேர்த்தும்

ஒன்றொன்று கூடி.

கூர் என்னும் பொருள் தருவது வள். அதன் ஓர் எழுத்து வ. துய்ப்பது து'. பிணக்கும் எழுத்து (வசை எழுத்து) வை. இவை இணைய “வதுவை. திரு மணம் என்னும் பொருள் தருவது வதுவை என்னும் சொல்.