உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/594

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பருங்கலம்

577

பாடுதலும், முண்டப் பாட்டு வாசித்தலும், தேர்கையும், திரிபாகியும், கண்ட கட்டும், கல்லவலும் முதலாக வுடை யனவும் அறிந்து கொள்க.

766

அவற்றுள் நிரோட்டியாவது:

(நேரிசை வெண்பா)

'ஆறிரண்டாம் ஆவியும் ஐயிரண்டாம் அவியும் மாறிகந்த உஊவும் ஓனமும் - கூறில்

வகர பகரமஃகான் வந்தணையாச் செய்யுள் நிகரில் நிரோட்டி எனல்

வரலாறு:

(நேரிசை வெண்பா)

"ஆர்கலிநீர் ஞாலத் தலந்தார்கட் காற்றலாற் காரெழிலி நாணக் கலந்ததே - சீர்சான்ற சண்டர சண்டன் சனந்தாங்கி சங்கையார் கண்டர கண்டன்றன் கை

பிறவும் அன்ன.

தேர்கையாவன: குறைத்தலைப் பிணங்கண்டு "காவிப் பல்லன்' என்றான் என்பதும், 'குதிரை பட்ட நிலமிது,' எனச் ‘செத்தது பெட்டைக் குதிரை,” ஏன்றான் என்பதும் முதலா வுடையன. ‘விரலும் 2கண்டகமும் கண்டறிந்தான்,' என்பதும் பிறவும் அன்ன.

3திரிபாகியாவது, 'மூன்றெழுத்தாய் ஒன்றின் பெயராய், முதலும் ஈறும் ஒன்றின் பெயராய், இடையும் ஈறும் ஒன்றின் பெயராயின, என்று வாயின் வாசகம் செய்வதும் நிறுவுவதுமாம்.

வரலாறு:

“பாதிரி” என நிறுத்தி, ‘பாரி' திரி' என்று அவிழ்ப்பது. பிறவும் அன்ன.

1.

3.

உ, ஊ, ஒ, ஓ, ஔ, ப, ம, வ, ஆகிய இவை இதழ் குவித்தொலிக்கப் பிறப்பன வாதலின் இவை வாராது பாடுவது. நிரோட்டி, இதழொட்டாப் பாடல், நிரோட்டகம் என்பனவும் இவை. திருச்செந்தில் நிரோட்டக அந்தாதி காண்க. 'இதழ்குவிந் தியையா தியல்வது நிரோட்டியம்' மாறனலங்காரம் 274. 2. வாள்.

மூன்று பாகத்தை யுடையது. திரிபங்கியாவது வேறுட. அஃது ஒரு செய்யுளாய் உறுப்பமைந்து பொருள் தருவதனை மூன்றாகப் பிரித்து எழுத வெவ்வேறு தனித்தனியே காண வருவது.