உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/595

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

578

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

‘கண்ட கட்டு' என்பது, ‘பசுக்கொண்டு போது,' என்று சொல்ல போயினான், சென்று கண்டு மீண்டு வந்து, ‘அவை யுள்ளாயின,' என்னிற் 'போதாவாயின,' என்று அவிழ்ப்பது, பிறவும் அன்ன.

கல்லவலாவது, நாடறி சொற்பொருள் பயப்பப் பிழையாமை

வாசகம் செய்வது.

வரலாறு :

“மனையிற்கு நன்று” “முதுபோக்குத் தீது” “முதுபோக்கே அன்று’” பெருமூர்க்குத் தீது

66

என்பனவாம்.

66

“உருவக மாதி விரவியல் ஈறா வருமலங் காரமும்

என்பது, உருவகமும், உவமையும், உவமையும், 'வழிமொழியும், மடக்கும், தீபகமும், வேற்றுமை நிலையும், வெளிப்படை நிலையும், நோக்கும், உட்கோளும், தொகை மொழியும், மிகை மொழியும், வார்த்தையும், தன்மையும், 2பிற பொருள் வைப்பும், சிறப்பு மொழியும், சிலேடையும், மறுத்து மொழி நிலையும், உடனிலைக் கூட்டமும், நுவலா நுவற்சியும், உயர் மொழியும், 3நிதரிசனமும், 4மாறாட்டும், 5ஒருங்கியல் மொழியும், ஐயமும், உயர்வும், விரவியலும், வாழ்த்தும் என்று ஓதப்பட்ட அலங்காரங்களும் என்றவாறு. அவை அணியியலுட் கண்டு கொள்க.

6

வாழ்த்து இரண்டு வகைப்படும்: மெய் வாழ்த்தும், இரு புற வாழ்த்தும் என.

வரலாறு:

66

(நேரிசை வெண்பா)

'கார்நறு நீலம் *கடிகயத்து வைகலும்

நீர்நிலை நின்ற *பயன்கொலோ - கூர் நுனைவேல்

வண்டிருக்க நக்கதார் வாமான் வழுதியாற்

கொண்டிருக்கப் பெற்ற குணம்?”

இது மெய் வாழ்த்து.

முத்தொள்ளாயிரம்.

1. பின்வரு நிலையாணி. 2. வேற்றுப் பொருள் வைப்பணிட. 3. காட்சியணி. 4. முரண் அல்லது விரோத அயி. 5. ஒப்புமைக் கூட்டவணி. 6. கலைவையணி.

(பா. வே) *கடியகத்து. *தவங்கொலோ.