உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/596

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

யாப்பருங்கலம்

இருபுற வாழ்த்து வருமாறு:

(நேரிசை வெண்பா)

"பண்டும் ஒருகாற்றன் பைந்தொடியைக் கோட்பட்டு

வெங்கடம் வில்லேற்றிக் கொண்டுழந்தான் - தென்களந்தைப் பூமான் திருமகளுக் கின்னம் புலம்புமால்

வாமான்றோர் வையையார் கோ'

ஃது இருபுற வாழ்த்து.

579

வசையும் இரண்டு வகைப்படும்: மெய் வசையும் இரு புற

வசையும் என.

66

வரலாறு:

(நேரிசை வெண்பா)

“தந்தை இலைச்சுமடன் தாய்தொழீஇ தான்பார்ப்பான்

எந்தைக்கீ தெங்ஙனம் பட்டதுகொல் - முந்தை

அவியுணவி னார்தெரியின் யாவதாங் கொல்லோ கவிகண்ண னார்தம் பிறப்பு!”

து மெய் வசை.

(நேரிசை வெண்பா)

“படையொடு போகாது நின்றெறிந்தான் என்றுங் கொடையொடு நல்லார்கட் டாழ்ந்தான் - படையொடு பாடி வழங்கும் தெருவெல்லாம் தான்சென்று

கோடி வழங்கு மகன்

இ ரு

இஃது இரு புற வசை.

66

‘கவியே கமகன் வாதி வாக்கியென்

றவர்கள் தன்மையும்

என்பது, ‘கவியும், கமகனும், வாதியும், வாக்கியும் என்ற இந்நால் வரது தன்மையும்,' என்றவாறு.

அவருட் கவி என்பார் நான்கு வகைப்படுவர்: ஆசு கவியும்; மதுர கவியும், சித்திர கவியும், வித்தார கவியும் என.

அவரைக் கடுங்கவி, இன்கவி, அருங்கவி, பெருங்கவி என்று வேண்டுவாரும் உளர்.

1

ஆசுகவியாவான், கொடுத்த பொருளும், தொடுத்த சூழலும், அடுத்த தொடையும் வழுவாமற் கடுத்துப் பாடுவான்.

1. எழுத்துச் சொற்பொருள் அணியாப் பிவையின், விழுத்தக ஒருவன் விளம்பிய உள்ளுறை, அப்பொழு துரைப்பது ஆசு கவியே. - இலக். விள. பாட்.4.