உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/597

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

580

1மதுர

இளங்குமரனார் தமிழ் வளம் – 13 கவியாவான்,

சொற்செல்வமும் பொருட் பெருமையும் உடைத்தாய்த் தொடையும் தொடை விகற்பமும் துதைந்து, உருவகம் முதலாகிய அலங்காரங்களை உட்கொண்டு, ஓசைப் பொலிவு உடைத்தாய், உய்த்துணரும் புலவர்கட்கு ஒலி கடல் அமிழ்தம் போன்று இன்பம் பயக்கப் பாடுவான்.

2சித்திர கவியாவான், மாலை மாற்று முதலிய அருங்கவி பாடும் தன்மையை உடை யான்.

3வித்தார கவியாவான், மும்மணிக் கோவையும், பன்மணி மாலையும், மறமும், கலி வெண்பாவும், மடலூர்ச்சியும் முதலாகிய நெடும்பாட்டுக் கோவையும்; பாசாண்டமும், கூத்தும், விருத்தமும், கதை முதலாகிய செய்யுளும் இயல் இசை நாடகங்களோடும் கலை நூல்களோடும் பொருந்தப் பாடும் பெருங்கவி எனக் கொள்க.

ஒழிந்த விகற்பங்கள் கவி வற்றுள்ளும் கண்டு கொள்க.

மயக்கறையுள்ளும், பிற

னி, 4கமகனாவான், பல நூல்களது வகைமையாலும், மதியது பெருமையாலும், கல்லாத நூல்களையும், கற்றார் வியப்ப உய்த்துரைக்கும் கருத்துடைய ய புலவன் எனக்

கொள்க.

5வாதியாவான், மேற்கோளும் ஏதுவும் எடுத்துக் காட்டும் நாட்டி, °அளவை செய்து, தன்கோள் நிறீஇப் பிறன் கோள் மறுப்பான் எனக் கொள்க.

வரலாறு:

'நிலைபேறு இல்லை சொல், செய்யப்படுதலால்; குடம் போல,' என்பது, நிரலே மேற்கோளும் ஏதுவும் எடுத்துக் காட்டும் ஆயின.

1. சொல்லும் பொருளும் சுவைபடநிறீஇச், செல்வழித் தொடையும் விகற்பமும் செறீஇ, உள்ளத் துள்ளே கொள்ளும் அமுதெனத், தன்மை உவமை பின்வரு பெற்றியின், உருவக முதலுற் றோசை பொலியப், பாடுதல் மதுர கவியெனப் படுமே. இலக். விள. 392, 393. சித்திர கவி சொல்லணி பாடுவோன்.

2.

3.

வித்தார கவி - அகலக் கவி. பெருங்காவியம். காவியம் முதலாயின பெருநூல் பாடுவோன்.

4. நிறைந்த கல்வியான் நிறைந்த அறிவான், அறைந்த ஒரு பொருளதனை விரிக்க, வல்லவன் கமகன் சொல்லுங் காலை.

5.

6.

ஏதுவு மேற்கோளும் எடுத்துக் காட்டித், தன்கோள் நிறீஇப் பிறர் கோள் மறுக்கும், வன்புடை யோனே வாதி யாவான். - இலக். விளக்கம். 559, 560

பிரயாணம், உறுதி.