உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/598

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பருங்கலம்

581

"நிலைபேறு இல்லை சொல்,' என்பது மேற்கோள்; செய்யப்படுதலால்' என்பது ஏது; குடம் போல' என்பது எடுத்துக் காட்டு.

'நிலைபேறு உடைத்துச் சொல், செய்யப்படாமையால்; ஆகாயம் போலும்,' என்பதும் ஓர் அளவை. 'அளவை' எனினும், ‘பிரமாணம்' எனினும் ஒக்கும்.

இனி, 'வாதம்' என்பது, சல வாதமும் விதண்டா வாதமும் முதலாகப் பல என்று எடுத்து ஓதுவாரும் உளர்.

வாக்கி என்பான், அறம் பொருள் இன்பம் வீடுகண்மேற் கேட்க வேட்கை பிணிக்கச் சொல்லும் ஆற்றல் உடைய ஆசிரியன் எனக் கொள்க.

அவையினது அமைதியும்’ என்பது, அவையோரது தன்மையும்' என்றவாறு. அவைதாம் நான்கு வகைப்படும்: நல் அவையும், தீ அவையும், குறை அவையும், நிறை அவையும்

என.

66

என்னை?

“அவையெனப் படுபவை அரில்தபத் தெரியின்

நல்லவை தீயவை குறைநிறை யவையெனச்

சொல்லுப என்ப தொல்லை யோரே’

என்பவாகலின்.

66

"அவற்றுள்,

(நல்லவை)

நல்லவை யென்பது நாடுங் காலை

எத்துறை யானும் இருவரும் இயம்பும்

அத்துறை வல்லோர் அறனொடு புணர்ந்தோர்

மெய்ப்பொருள் கண்டோர் மிக்கவை ஓர்ப்போர் கற்றவர் கல்விக் கடாவிடை அறிவோர் செற்றமும் சினமும் சேரா மனத்தோர் முனிவொன் றில்லோர் மூர்க்கர் அல்லோர் இனிய முகத்தோர் இருந்துரை கேட்போர் வேந்தன் ஒருவர்கண் வாரம் படினும் தாந்தாம் ஒருவர்கட் பாங்கு படாதோர் அன்னோர் முன்னர்க் கூறிய பொழுதிற்