உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/604

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பருங்கலம்

விரிந்திலங்கு வெண்குடைச் செங்கோல் விசயன் எரிந்திலங்கு வேலின் எழும்”

587

இதனுள் மதியை 'விசயன் வேல்போல் எழும்' என்பான், ‘விசயன் எரிந்து, என அத்தொழில் அவன்மேல் ஏறச் சொன்னமையாற் சொல்லானந்தம்.

பொருளானந்தமாவது, பாட்டுடைத் தலைமகன் நாட்டின் யாதானும் ஒன்றனைச் சிறப்பித்துச் சொல்லலுற்ற விடத்து, அத்திணைக்கு உரிய இறைச்சிப் பொருளை ஊறுபடச் சாவவும் கெடவும் சொல்லுவதூஉம், புகழ்தலுற்றவிடத்து ஆகாத பெற்றியின், மங்கலம் அழியச் சொல்வதூஉம். மங்கல மாகிய உவமையால் மங்கலம் இல்லாத உபமேயத்தை உவ மிப்பதூஉம், தலைமகனோடு உவமிக்கப் பட்டதற்கு இடை யூறுபடச் சொல்லுவதூஉம் முதலாக வுடையன எனக் கொள்க.

என்னை?

"இறைச்சிப் பொருளை ஊறுபடக் கிளப்பினும் புகழ்ச்சிக் கிளவியிற் பொருந்தா கூறலும் உவமைக் காட்சியின் ஊனம் தோன்றினும் இவையல பிறவும் இன்னவை வரினே. அவையென மொழிப பொருளா னந்தம் என்றாராகலின்.

வரலாறு:

- யா. வி. 4. மேற்.

“முறிமே யாக்கைதன் கிளையொடு துவன்றிச் சிறுமை யுற்ற களையாப் பூசல்” - மலைபடுகடாம் 313 -4 என மலைபடு கடாத்துக் கூத்தரை ஆற்றுப்படுப்பான், 'நீர் போம் வழியுள் இன்னவும் இன்னவும் ஏதங்களாவன; அவற்றைச் சாராதே போமின், என்பான், 'ஒரு குரங்கு ஒரு வரைமேலிருந்து வழுவி ஒரு விடாகம் புக்கு விழுந்தது கண்டு, மற்றைக் குட்டியும் தாயும் விடாகம் புக்கு வீழ்ந்தன; வீழக் குரங்குகள் எல்லாம் அவற்றுக்கு இரங்கி அழுது, பெரியதோர் ஆரவாரம் எழுந்தது. அவ்வரையை ஒருவிப் போமின்,' என்றான். அவன் மலைக்கு உரிய இறைச்சிப் பொருளாகிய குரங்கிற்கு இடையூறு சொன்னமையால், இது பொருளானந்தம்.

“கணங்கொ டோகையிற் கதுப்பிகுத் தசைஇ விலங்குமலைத் தமர்ந்த சேயரி நாட்டத்

திலங்குவளை விறலியர் நிற்புறஞ் சுற்ற’ - மலைபடுகடாம் 44 - 46. என்பது, ‘பீலி விரித்துப் பல மயில் இருந்தாற்போல வழி வந்து அசைந்த வருத்தத்தால் தத்தம் கேசங்களை எடுத்து முடிக்க