உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/605

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

588

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

இல்லாது விரித்திருப்பார், அவர் மலைமேல் வழிபோம் கூத்தப் பெண்டிர்,' என்று புகழ்தலுற்றான். பெண் சாதிகள் ஊறுபட்டு அழுகை நிகழ்ந்தவிடத்து மயிர் விரித்திருப்பார்கள். அவ்வகை மங்கலம் இல்லாத மயிர் விரியை அவன் நாட்டோடும் புகழ்ந் தமையான், இதுவும், பொருளானந்தம்.

“பெயலொடு வைகிய வியன்கண் இரும்புனத் தகலிரு விசும்பின் ஆஅல் போல

வாலிதின் விரிந்த புன்கொடி முசுண்டை”

- மலைபடுகடாம் 99 -101. என்பது, நாடு புகழ்தலுற்றான், மற்ற மங்கலம் உளவாக வைத்து, வானத்துள் துறுமித் தோன்றுங் கார்த்திகை மீனோடு கடைப் பட்டார் தின்னும் அடகாகிய முசுண்டையின் பூவை ஒப்பித் தமையான், இஃது உவமக் காட்சியுள் ஊனம் தோன்றிய ஆனந்த உவமை.

(கட்டளைக் கலித்துறை)

"திண்டேர் வயவரைச் சேர்வைவென் றானன்ன தேங்கவுண்மா வண்போ தமன்ற வழைநிழல் நீக்கிய வார்சிலம்ப!

நண்போ நினையிற்பொல் லாதது; நிற்க என னன்னுதலாள் கண்போல் குவளை கொணர்ந்ததற் கியாதுங்கைம் மாறிலமே

- யா. வி. 95. மேற். இதனுள் தலைமகனோடு உவமிக்கப்பட்ட யானையைத் துரந்தான் என ஊறுபடச் சொன்னமையால், இதுவும் உவமக் காட்சியில் ஊனம் தோன்றிய ஆனந்த உவமை.

66

(நேரிசை வெண்பா)

"வள்ளெயிற்றுப் பேழ்வாய் ஞமலிக்கு மான்குழாம் எள்ளி இரிந்தாற்போல் எவ்வழியும் – வள்ளற்கு மாலார் கடலன்ன மண்பரந்த வாட்டானை

மேலாரு மேலார் விரைந்து

وو

இதனுட் புலியினோடு

ஆனந்த உவமை.

உவமிக்கப்படுகின்ற

தலை

மகனாகிய வீரனோடு நாயை உவமித்தமையால், இறப்ப இழிந்த

(நேரிசை வெண்பா)

“இந்திரனே போலும் இளஞ்சாத்தன்; சாத்தற்கு

மந்தரமே போன்றிலங்கும் மல்லாகம் ; - மந்தரத்துத் தாழருவி போன்றுளது தார்மாலை ; அம்மாலை ஏழுலகும் நாறும் இனிது”