உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/606

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பருங்கலம்

589

இதனுள் கீழ்மகனாகிய சாத்தனைக் குல மன்னரை உவமிக்கப் பாலனவற்றோடு அவனுக்குப் பரிக்கலாகாமை உவமித்தலின், இறப்ப உயர்ந்த ஆனந்த உவமை.

“சென்றுபடு பருதியிற் சிவந்த தோற்றத்தை’

இதனுள் படுஞாயிற்றுக்கு உவமையாகக் காட்டலின், இறந்து பாட்டுவமை ஆனந்தம்.

166

தீயி னன்ன ஒண்செங் காந்தள்

தூவலிற் கலித்த புதுமுகை ஊன்செத் தெய்யா தெறிந்த புன்புறச் சேவல்

ஊஉன் அன்மையின் உண்ணா துகுத்தென

நெருப்பின் அன்ன பல்லிதழ் தாஅய்

வெறிக்களம் கடுக்கும் வியலறை தோறும்”

மலைபடுகடாம் 145-150.

இதனுள், 'தீப்போலாம் உருவம் தோன்றும் செங்காந்தட் பூவினை ஊன் என்று கருதி அறியாது எறிந்த பருந்து, காலான் இடுக்கி வாயிற்குத்தி, ஊன் அன்மை கண்டு விட்டது,’ என்று காந்தட் பூவினது சிவப்பினைக் குணனேறச் சொல்லுவான், அவாவிச் சென்றது கொண்டு, அவாவியது அன்மையால் விட்டது என்று பரிசிற்கவி, அவாவிய கவியை அவாக்கெடக் கூறினமையின், இது பரிசிற் பொருளானந்தம்.

யாப்பானந்தமாவது முன் தொடுக்கப்பட்ட சிறப்புடை மொழியின் பின்னர்ப் பாட்டுடைத் தலைவன் பெயர் நிறீஇ அதன் பின்னே சிறப்புடை மொழி நிறீஇச் சிறப்பிக்கப் படுவதனை இவ்வாறு இடர்ப்படப் பாடுவது.

66

1. “இதற்கு, நன்னன் என்னும் பெயர் தீயோடு அடுத்த தன்மையின் ஆனந்தமாய். பாடினாரும் பாட்டுண்டாரும் இறந்தாரென்று ஆளவந்த பிள்ளையாசிரியர் குற்றங் கூறினாரால் எனின், அவர் அறியாது கூறினார். செய்யுள் செய்த கௌசிகனார் ஆனந்தக் குற்றம் என்னும் குற்றம் அறியாமல் செய்யுள் செய்தாரேல் இவர் நல்லிசைப் புலவராகார். இவர் செய்த செய்யுளை நல்லிசைப் புலவர் செய்த ஏனைச் செய்யுட்களுடன் சங்கத்தார் கோவாமல் நீக்குவர். அங்ஙனம் நீக்காது கோத்ததற்குக் காரணம் ஆனந்தக் குற்றம் என்பதொரு குற்றம் இச் செய்யுட்கு உறாமையான் என்றுணர்க.

இச் சொன்னிலை நோக்குமிடத்து ஒரு குற்றமுமின்று. என்னை? அன்ன வென்னும் அகரவிற்றுப் பெயரெச்ச உவம உருபு தீ யென்னும் பெயரைச் சேர்ந்து நின்று இன்சாரியை இடையே அடுத்து நிற்றலின். நன்னனென்னும் நகர முதலும் னகர வொற்றீறுமாய் நிற்கும் சொல்லாயினன்றே அக் குற்றம் உளதாவது என மறுக்க. நன்னவென அண்மை விளியாய் நின்ற முன்னிலைப் பெயரென்று குற்றங் கூறுவார்க்கு இப்பாட்டுப் படர்க்கையேயாய் நிற்றலிற் குற்றமின்றென்க. நூற்குற்றங் கூறுகின்ற பத்துவகைக் குற்றத்தே ‘தன்னான் ஒரு பொருள் கருதிக் கூறல்' என்னுங் குற்றத்தைப் பின்னுள்ளோர் ஆனந்தக் குற்றம் என்பதொரு குற்றமென்று நூல்செய்ததன்றி அகத்தியனாரும் தொல்காப்பியனாரும் இக் குற்றங் கூறாமையிற் சான்றோர் செய்யுட்கு இக் குற்ற முண்டாயினும் கொள்ளார் என மறுக்க. மலைபடுகாடாம். நச்.

-