உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

மெய்யாவன, ககரம் முதல் னகரம் ஈறாய்க் கிடந்த பதினெட்டு எழுத்தும் எனக் கொள்க. என்னை?

“ககரம் முதலா னகரம் ஈறா

இவையீ ரொன்பதும் மெய்யென மொழிப”

என்பது சங்க யாப்பு ஆகலின்.

ஒக்கும்.

‘மெய்' எனினும், ‘உடம்பு’ எனினும் ‘உறுப்பு’ எனினும்

உயிர்மெய்யாவன, உயிரும் மெய்யும் கூடின எழுத் தெனக் கொள்க. என்னை?

'உயிரும் மெய்யும் புணர்ந்த புணர்ச்சி

உயிர்மெய் என்றாங் குணர்ந்தனர் கொளலே

எனவும்,

“உயிரும் மெய்யும் 'ஓராங் கியைந்த உயிர்மெய் என்ப உணர்ந்திசி னோரே'

எனவும்,

266

2‘“உயிரின் அளபே அளபென மொழிப்

எனவும்,

“உயிரின் அளவுயிர் மெய்யென மொழிப வழக்கொடு வரூஉங் காலை யான

99

எனவும் சொன்னார் தொல்லாசிரியர் ஆகலின்.

பதினெட்டு மெய்மேலும் பன்னிரண்டு உயிரும் ஏற இருநூற்று ஒருபத்தாறு உயிர்மெய்யாம். என்னை?

“உயிரீ ராறே; மெய்மூ வாறே;

3

அம்மூ வாறும் உயிரொ டுயிர்ப்ப

இருநூற் றொருபத் தாறுயிர் மெய்யே”

என்பது பல்காயம் ஆகலின்.

குற்றெழுத்தாவன, அ, இ, உ, எ, ஒ என்னும் இவ்வைந்தும்

எனக் கொள்க. என்னை?

"குறிலோ ரைந்தும் அறிவுறக் கிளப்பின் அஇ உஎ ஒஎனும் இவையே'

என்பது சங்க யாப்பு ஆகலின்.

1. ஒன்றாக இணைந்த

2. உயிரின் அளபே உயிர்மெய்யின் அளபு என்க. 3. புணர்தல், கூடல்.