உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/612

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பருங்கலம்

595

னிப் பண் நான்கு வகைய: அவை பாலை யாழ், குறிஞ்சி

யாழ், மருத யாழ், செவ்வழி யாழ் என்பன.

என்னை?

“பாலை குறிஞ்சி மருதஞ்செவ் வழியென நால்வகைப் பண்ணா நவின்றனர் புலவர்"

என்றார் வாய்ப்பியனார்.

89

66

“விளரி யாழோ டைந்தும் என்ப

னி, பண் சார்வாகத் தோன்றியன திறமாம். என்னை?

"பண்சார் வாகப் பரந்தன எல்லாம் திண்டிறம் என்ப திறனறிந் தோரே”

என்றாராகலின்.

266

66

அத்திறம் 'இருபத்தொரு வகைய: 'அராகம் நோதிரம் உறழ்ப்புக் குறுங்கலி ஆசான் ஐந்தும் பாலையாழ்த் திறனே"

'நைவளம் காந்தாரம்

பஞ்சுரம் படுமலை மருள்அயிர்ப் பரற்றுச் செந்திறம் எட்டும் குறிஞ்சியாழ்த் திறனே” “நவிர்வடுகு வஞ்சி

செந்நிறம் நான்கும் மருதயாழ்த் திறனே”

“சாதாரி பியந்தை

நேர்ந்த திறமே பெயர்திறம் யாமயாழ்

சாதாரி நான்குஞ்செவ் வழியாழ்த் திறனே”

என்றார் வாய்ப்பியனார்.

பாலை எழு வகைய: 3செம்பாலை, படுமலைப் பாலை, சவ்வழிப் பாலை, அரும் பாலை, கோடிப்பாலை, விளரிப் பாலை, மேற்செம் பாலை என.

1. துளைக் கருவியானும் நரம்புக் கருவியானும் குரல் முதலாயுள்ள ஏழிசையானும் சரிகமபதநி என்னும் ஏழெழுத்தினையும் மூவகை வங்கியத்தினும் நால்வகையாழினும் பிறக்கும்

பண்களுக்கு இன்றியமையாத மூவேழு திறத்தையும்

99

– சிலப். 5: 37 அடியார்க்.

66

2.

தக்கராகம் நோதிரம் காந்தாரம் பஞ்சமமே

துக்கங் கழிசோம ராகமே மிக்கதிறற்

3.

காந்தார மென்றைந்தும் பாலைத் திறமென்றார் பூந்தார் அகத்தியனார் போந்து”

- சிலப். 4. 72-6. அடியார்க். மேற்.

சிலப்பதிகாரம் 3: 70 -1 - அடியார்க்கு நல்லார் உரை காண்க.