உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/616

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பருங்கலம்

599

“வெட்சி முதலாத் தும்பை யீறாச் செப்பிய ஏழும் புறப்பொரு ளாகும்"

எனக் கொள்க.

வெட்சி ஆ கவர்தலானும், கரந்தை உட்குவரச் சென்று விடுத்தலானும்,

1“வெட்சியும் கரந்தையும் தம்முள் மாறே"

பன்னிருபடலம்

வஞ்சி மேற்செல்லோனும், காஞ்சி அஞ்சாது எதிர் சென்று

ஊன்றலானும்,

உழிை

2“வஞ்சியும் காஞ்சியும் தம்முள் மாறே"

பன்னிருபடலம்

ழிஞை ஆரெயில் முற்றலானும், நொச்சி விழுமிதின் அவ்வெயிற் காத்தலானும்,

366

3‘“உழிஞையும் நொச்சியும் தன்முள் மாறே”

4“பொருதல் தும்பை புணர்வ தென்ப”

பன்னிருபடலம்

இவற்றின் விகற்பமெல்லாம் பன்னிரு படலத்துட் காண்க. புறப்புறமாவன, வாகையும், பாடாண் பாட்டும், பொது

வியற்றிணையும் எனக் கொள்க.

என்னை?

“வாகை பாடாண் பொதுவியற் றிணையெனப் போகிய மூன்றும் புறப்புறப் பொருளே "

என்றார் தொல்காப்பிய அகத்தியம் உடையார்.

“மதுவிரி வாகையும் பாடாண் பாட்டும் பொதுவியற் படலமும் புறமா கும்மே”

என்றார் வாய்ப்பியனார்.

வை ஆமாறு, 5வெண்பா மாலையுள்ளும் பன்னிரு

படலத்துள்ளும் காண்க.

இன்னும் 'திணையே' என்றதனால், குறிஞ்சி முதலிய ஐந்திணையும் உணர்த்தும்.

என்னை?

“குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல்

அருஞ்சுரப் பாலையோ டைந்தும் அகமே’

என்றாராகலின்.

1-4. மதுரைக் காஞ்சி

நச்சினார்க்கினியர் குறிப்பு நோக்குக, 5. வெண்பா மாலை' என்றது புறப்பொருள் வெண்பா மாலையை என்க. என்னை? வெண்பா மாலை எனப்பெயர் நிறீஇ (பு. வெ. சிறப்) என்றாராகலின்.