உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/619

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

602

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

நான்கு யுகமும் எனினுமாம். இவை ஆமாறு உரைப்பிற் பெரு கலின், உலக சமய பேதம் வல்லார் வாய்க் கேட்டு உணர்க.

16

இனி, எண் வகை மணம்' ஆவன: பிரம மணம், விதி மணம், ஆரிட மணம், தெய்வ மணம், அசுர மணம், இராக்கத மணம், பைசாச மணம், கந்தருவ மணம் என்பன.

பிரம மணமாவது, ஓர் இருதுக்கண்ட கன்னியை மற்றை இருதுக் காணாமே கொளற்பால மரபினோர்க்கு நீர் பெய்து கொடுத்தல்.

என்னை?

(நேரிசை வெண்பா)

“ஒப்பாருக் கொப்பார் ஒருபூப் பிரிந்தபின் இப்பால் மதிதோன்றா எல்லைக்கண் - அப்பால் தருமமே போல்கென்று தக்கார்க்குச் சேர்த்தல் பிரமமாம் போலும் பெயர்’

என்றாராகலின்.

ரு

விதி மணமாவது, கொடுத்த பரியத்தின் இரு மடங்கு மகட் கொடுப்போன் கொடுத்தல்.

என்னை?

(நேரிசை வெண்பா)

"கொடுத்த பொருள்வாங்கிக் கொண்ட பொழுது

மடுப்பர் மடுத்தற் கமைந்தால் - அடுப்போன்

இரண்டா மடங்குபெய் தீவ ததுவே

இரண்டாம் மணத்தின் இயல்பு”

என்றாராகலின்.

ஆரிடமாவது, ஏறும் ஆவும் கொணர்ந்து நிறீஇ, அவற்றின் முன்னர்க் கைக்கு நீர் பெய்து கொடுத்தல்.

1.

66

என்னை?

நேரிசை வெண்பா)

இற்குலத்தோ டொப்பானுக் கொப்பான் இமிலேறாப் பொற்குளம்பிற் பொற்கோட்ட வாப்புனைந்து - முற்படுத்து

இறையனார் களவியல் 1. உரை காண்க. அதனுள் இவ்வெண் வகை மணங்கட்கும் இவற்றின் பொருள்நிலை யுட்கொண்ட அறநிலை. ஒப்பு, பொருள்கோள், தெய்வம் யாழோர் கூட்டம், அரும்பொருள் வினைநிலை, இராக்கதம், பெய்நிலை என்னும் பெயர்கள் உளவாதலறிக.