உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/620

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பருங்கலம்

வாரிடம்பே ராமுலையை வாழ்க்கைக்கண் வைப்பதுரை ஆரிடம் பேராம் அதற்கு’

என்றாராகலின்.

99

603

தெய்வமாவது, வேள்விக் களத்துத் தீப்பாரித்துத் தீ முன்னர் வேள்வி ஆசிரியர்க்குக் கைக்கு நீர் பெய்து கொடுத்தல்.

என்னை?

(நேரிசை வெண்பா)

“மெய்ப்பாலைப் பெண்டன்மை எய்தியபின் மெல்லியலை

ஒப்ப உணர்ந்த பொழுதுண்டல் - ஒப்பாற்கு

நெய்தயங்கு தீமுன்னர் நேரிழையை ஈவதே

தெய்வப்பே ராகும் தெளிந்து

என்றாராகலின்.

இவை நான்கும் அந்தணர்க்கு உரிய.

அசுரமாவது, இன்னது செய்தார்க்கு இவள் உரியள்,' என்ற விடத்து, அன்னது செய்து எய்துவது. அவை வில்லேற்று தல், திரிபன்றி எய்தல், கொல் ஏறு கோடல் முதலிய.

என்னை?

(நேரிசை வெண்பா)

66

'வில்லேற்றல் வேள்வியைக் காத்தல் மிகுவலிக்

கொல்லேற் றியல்குழையைக் கோடலென் - றெல்லாம்

அரியனசெய் தெய்தினான் ஆயின் அசுரம்;

அரியவாம் அந்த மணம்

இராக்கதமாவது, ஆடை மேலிடுதல், பூ மேலிடுதல், கதவடைத்தல் முதலியவற்றால் வலிதிற் கோடல்.

என்னை?

(நேரிசை வெண்பா)

“பூந்துகிலோ டின்னவுமேல் இட்டும் புதவடைத்தும் பாய்ந்து *கதந்தாஅய்ப் பற்றிக்கொண் - டேந்திழையை எய்தப் படுவ திராக்கதம் என்பதே

மைதீர்ந்தார் சொல்லும் மணம்

(பா. வே) *வலிந்துதாய்.

وو