உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/622

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பருங்கலம்

தமிழியல் வழக்கமெனத் தன்னன்பு மிகைபெருகிய களவெனப் படுவது கந்தருவ மணமே’

என்றார் அவிநயனார்.

இனி, 'எழுத்து நான்கு கு வகைய:

605

உருவெழுத்தும்,

ணர்வெழுத்தும், ஒலியெழுத்தும், தன்மையெழுத்தும் என.

என்னை?

"அவற்றுள்,

உருவே உணர்வே ஒலியே தன்மையென

இருவகை எழுத்தும் ஈரிரண் டாகும்'

என்றாராகலின்.

66

அவற்றுள் 2உருவெழுத்தாவது, எழுதப்படுவது.

என்னை?

“காணப் பட்ட உருவம் எல்லாம்

மாணக் காட்டும் வகைமை நாடி வழுவில் ஓவியன் கைவினை போல எழுதப் படுவ துருவெழுத் தாகும்”

என்றாராகலின்.

உணர்வெழுத்தாவது,

“கொண்டவோர் குறியாற் கொண்ட அதனை உண்டென் றுணர்வ துணர்வெழுத் தாகும்”

ஒலியெழுத்தாவது,

366

இசைப்படு புள்ளின் எழாஅல் போலச் செவிப்புல னாவ தொலியெழுத் தாகும்” தன்மையெழுத்தாவது,

என

66

முதற்கா ரணமுந் துணைக்கா ரணமும் துணைக்கா ரணத்தொடு தொடரிய உணர்வும் அவற்றொடு புணர்ந்த அகத்தெழு வளியின் மிடற்றுப்பிறந் திசைப்பது தன்மை எழுத்தே”

4எழுத்தினது விகற்பமும், எழுத்தினது புணர்ச்சியும் எழுத்ததிகாரத்துட் காண்க.

1. பெயரெழுத்து, முடிவெழுத்து, வடிவெழுத்து, தன்மை எழுத்து என்பார் திவாகரர்.

2.

3.

(சேந்தன் திவாகரம். ஒலி

வடிவ எழுத்து. “வடிவாவது கட்புலனாகியே நிற்கும். அது வட்டம் சதுரம் முதலிய முப்பத்திரண்டனுள் ஒன்றை உணர்த்தும்.” தொல். எழுத்து. பாயிரம். நச்)

இசைக்கப்படுதல், பறவை எழுப்புதல் முதலாகிய ஒலிகள்.

4. பெயர் வேறுபாடுகள். உயிர், மெய், உயிர்மெய், வலி, மெலி முதலியன.