உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/623

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

606

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

அ, க, ச, ட, த, ப, ய, முதலிய ஆயவெழுத்தும் ; அ, ச, ல, வ, ர, ங, ய முதலிய இராசி எழுத்தும்; கார்த்திகை முதலிய நாள் எழுத்தும்; தோபம் முதலிய நால்வகை எழுத்தும்; சாதி முதலிய தன்மை எழுத்தும்; உச்சாடனை முதலிய உக்கிர எழுத்தும்; சித்திர காருடம் முதலிய முத்திற எழுத்தும்; பாகியல் முதலிய நால்வகை எழுத்தும்; புத்தேள் முதலிய நாற்கதி எழுத்தும்; தாது முதலிய யோனி எழுத்தும்; மாகமடையம் முதலிய சங்கேத எழுத்தும்; கலி முதலிய சங்கேத எழுத்தும்; பார்ப்பான் வழக்காகிய பதின்மூன்றெழுத்தும் என்ற இத்தொடக்கத்தனவும்; கட்டுரை எழுத்தும்; வச்சிரம் முதலிய வடிவெழுத்தும்; மற்றும் பல வகையாற் காட்டப்பட்ட எல்லா எழுத்தும் வல்லார் வாய்க் கேட்க.

இனி, சொல் நான்கு வகைய: பெயர்ச்சொல், தொழிற் சொல், இடைச்சொல், உரிச்சொல் என.

66

எப்பொரு ளேனும் ஒருபொருள் விளங்கச்

செப்பி நிற்பது பெயர்ச்சொல் ஆகும்”

"வழுவில் மூவகைக் காலமொடு சிவணித் தொழில்பட வருவது தொழிற்சொல் ஆகும்”

66

66

சுடும்பொன் மருங்கிற் பற்றா சேய்ப்ப இடைநின் றிசைப்ப திடைச்சொல் ஆகும்”

‘மருவிய சொல்லொடு மருவாச் சொற்கொணர்ந் துரிமையொ டியற்றுவ துரிச்சொல் ஆகும்"

என்பன வாய்ப்பியம்.

இனி, ஒருசார் ஆசிரியர். இயற்சொல், திரிசொல், திசைச்சொல் என்றும் உரைப்பர்.

அவற்றுள் திரிசொற் சில வருமாறு:

“பைஞ்ஞீலம் பைதிரம் விரற்றலை யோர்பித்தை பூழிலவம் பீளை துருவையனல் தொடுப்பகை பிறடி

கருவுள நவிரல் வசிதலையல் நிவப்புச்

செப்பிய பிறவும் திரிசொல் ஆகும்”

ஆடு, எருது, விடை, ஏறு, மோத்தை, சேவல், ஒருத்தல், கலை, களிறு, ஏற்றை, கடுவன், கூரன், பகடு என இவை ஆண் பெயர்.