உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/624

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பருங்கலம்

607

மகடு, ஆ, பிடி, குமரி, கன்னி, பிணவு, முடுவல் என்ற ன்னவை பெண் பெயர்.

குழவி, மகவு, மறி, குருளை என்ற இன்னவை இளமைக்கு எய்திய பெயர்.

“பெயரிவை மும்மையும் பிறவுமிப் பொருட்கண்

இயைபெதிர் இயலும் என்றுணர்ந் தியையக் குறியொடு காரணம் கொௗவகுத் தொழிந்த தறிய வுரைப்போன் ஆசிரி யன்னே"

என இவற்றின் விரிவறிந்து வந்துழிக் காண்க.

டைச்சொல்லும் உரிச்சொல்லும் தொல்காப்பியம், தக்காணியம், அவிநயம், நல்லாறன் மொழி வரி முதலிய வற்றுட் காண்க.

இனி, 'செந்துறை மார்க்கமும் வெண்டுறை மார்க்கமும்' ஆமாறு: 'நாற்பெரும் பண்ணும். 2இருபத்தொரு திறனும் ஆகிய இசையெல்லாம் செந்துறை; ஒன்பது மேற்புறமும், பதினோராடலும் என்ற இவையெல்லாம் வெண்டுறை யாகும்,

என்பது வாய்ப்பியம்.

66

இனி, ஒரு சார் ஆசிரியர் சொல்லுமாறு:

“கந்தருவம் என்பது கசடறக் கிளப்பிற்

செந்துறை வெண்டுறை எனவிரு வகைத்தே”

3அவற்றுட் 'செந்துறை' என்பது, பாட்டிற்கு ஏற்பது; வெண்டுறை' என்பது, ஆடற்கு ஏற்பது.

என்னை?

“செந்துறை என்ப தொலிகுறித் தற்றே; வெண்டுறை என்பது கூத்தின் மேற்றே

என்பவாகலின்.

செந்துறை விரி மூவகைய: செந்துறையும், செந்துறைச் செந்துறையும், வெண்டுறைச் செந்துறையும் என.

1.

2.

'யாமயாழ்ப்பெயர் குறிஞ்சி யாழும், செவ்வழி யாழ்ப்பெயர் முல்லை யாழும், பாலை யாழும், மருத யாழுமென நால்வகை யாழும் நாற்பெரும் பண்ணே'

சிலப்பதிகாரம் 5: 27 உரை காண்க.

3. செந்துறை, பாடற்கும் வெண்டுறை ஆடற்கும் ஆதலை “வரிக்கும் ஆடற்கும் உரிப்பொருள் இயக்கி” என்னும் சிலப்பதிகார அடிக்கு அடியார்க்கு நல்லார் வரைந்த உரையால் அறிக. (சிலப். 3:29)