உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/625

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

608

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

வெண்டுறை விரி மூவகைய: வெண்டுறையும், வெண்டுறை வெண்டுறையும், செந்துறை வெண்டுறையும் என.

என்னை?

“ஆங்கிரு துறையும் அறுவகைப் பகுதிய

பாங்கின் உணரும் பண்பி னானே”

என்றாராகலின்.

அவற்றுட் செந்துறைப் பாட்டாவன, பரிபாடலும், மகிழிசையும், காம இன்னிசையும் என்பன.

என்னை?

“தெய்வம் காமம்

மையில் பொருளாம் பரிபா டல்லே

மகிழிசை நுண்ணிசை யுரிபெரு மரபிற்

காமவின் னிசையே யாற்றிசை இவற்றைச் செந்துறை என்று சேர்த்தினர் புலவர்”

என்றாராகலின்.

766

செந்துறைச் செந்துறைப் பாட்டாவன.

ஓங்கெழில் முதலாக்

குன்று கூதிர் பண்பு தோழி

விளியிசை முத்துறழ் என்றிவை யெல்லாம் தெளிய வந்த செந்துறைச் செந்துறை”

எனக் கொள்க.

வெண்டுறைச் செந்துறைப் பாட்டாவன, கலியும்,

வரியும், சிற்றிசையும், சிற்றிசைச்

இத்தொடக்கத்தன.

என்னை?

1.

“கலியே வரியே சிற்றிசை என்றா

மலிதரு பேரிசைச் சிற்றிசைச் சிற்றிசை என்றிவை யெல்லாம் பாணி யியந்தூக்

>

சிற்றிசையும் என்ற

இதனுள், 'ஓங்கெழில்' என்பது, 'ஓங்கெழி லகல்கதிர் பிதிர்துணி மணிவிழ முந்நீர் விசும்பொடு பொருதலற' என்னும் பாட்டையும்; 'குன்று' என்பது, ‘குன்று குடையாக் குளிர்மழை தாங்கினான் என்னும் பாட்டையும்; 'கூதிர்' என்பது, 'கூதிர்கொண் டிருடூங்கும்’ என்னும் பாட்டையும்; 'தோழி' என்பது. தோழி வாழி தோழி வாழி, வேழ மேறி வென்ற தன்றியும் ‘என்னும் பாட்டையும், 'விளியிசை' என்பது, 'விளியிசைப்ப விண்நடுங்க' என்னும் பாட்டையும்; 'முத்துறழ்' என்பது, 'முத்துற ழகலந்தேங்கி' என்னும் பாட்டையும் முதல் நினைப்புக் குறிப்பால் உணர நின்றன. (நன். 268. மயிலை).