உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/629

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

612

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

அறிந்து இடத்திற்கு ஏற்ற வாற்றான் உரைக்க வல்லோன் கேள்வி முற்றிய ஆசிரியன் என்று கூறப்படுவான் என்றவாறு.

(நேரிசை வெண்பா)

“சொல்லிற் சுருங்கி பொருள்பெருகித் *தொன்ஞானம் எல்லாம் விளக்கி இருளகற்றும்-நல்யாப் பருங்கலம் வல்லவர் தாமன்றே கேள்வி *ஒருங்கலர்த்த வல்லோர் உணர்ந்து'

99

ஒழிபியல் முற்றிற்று.

யாப்பருங்கல மூலமும் விருத்தியுரையும் முற்றும்.

(பா. வே) *தொன்ஞாலம். ஒருங்கறிய வல்லார்.