உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/628

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பருங்கலம்

611

ஒன்று கொட்டும், முருட்டும் என்ற இத் தொடக்கத்து மேற்புறச் செய்யுள் எனக் கொள்க.

என்னை?

“தேவ பாணி முதலா ஏவிய

ஒன்றீ றாகக் கிடந்தவும் வந்த இலங்கிரு வைளவம் வானூர் மதியம் என்றிம் மொழிந்த மேற்புறம் எல்லாம் செந்துறை வெண்டுறை சேர்த்துங் காலே

என்றாராகலின்.

இனி, முப்பத்திரு வகை உத்தியாவன, முன் கூறியவே. (யா. வி. 95. மேற்)

தருக்கமாவன, 'ஏகாந்த வாதமும், அநேகாந்த வாத மும் என்பன. அவை குண்டலம், நீலம், பிங்கலம், அஞ்சனம், தத்துவ தரிசனம், காலகேசி முதலிய செய்யுள்களுள்ளும்; சாங்கியம் முதலிய ஆறு தரிசனங்களுள்ளும் காண்க.

இனி, நாடகச் செய்யுளாவன.

“வரியே குரவை மதலை மேடம்

முரியே தாழிசை முன்னிலை வாழ்த்தே தேவ பாணி சிற்றிசை நேரிசை

பாவை தனிநிலை பாங்கமை மடலே”

என்று ஓதப்பட்டன. அவை இன்மணியாரத்துள்ளும் பிற வற்றுள்ளும் கண்டு கொள்க.

“முந்துநூல் முடிந்த முறைமையின் வழாஅமை

வந்தன பிறவும் வயினறிந் துரைப்போன் அந்தமில் கேள்வி ஆசிரி யன்னே”

என்பது, மேல் நூல் முடிந்த முறைமையின் வாழாமைச் சொன்னவும், சித்திர சமைய பத்திர சேதக கணித கத்தவுத்தி முதலிய பிறவும்

1.

ஏகாந்தவாதம் ஆருகதம் அல்லாத மற்றை ஒரே பட்சத்தைக் கூறும் தருக்கம். அநேகாந்த வாதம் பல பட்சங்களைக் கூறும் தருக்கம்.