உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 14.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பட்டினத்தடிகள் வரலாறும்

நூலாராய்ச்சியும்

மன்ற

இந்நூல் கழகத்தின் 622ஆம் வெளியீடாக 1958 இல் வெளிவந்தாலும், அதன் முதற்பதிப்பு மணிவாசக வெளியீடாக 1930 இல் வெளிவந்ததாகும்.

ல்

"சைவத் திருமுறைகளுள் பதினோராந் திருமுறையுட் காணப்படும் பட்டினத்தடிகள் திருவருட் பாடல்கள் இணையற்ற நுண்பொருட் செறிவும் செம்மொழி வளமும் வாய்க்கப் பெற்றன. அவற்றைத் தமிழுலகிற் பலர் கற்றுப் பயன் துய்யாமை பற்றி அவற்றின் விழுமிய கருத்துக்களை ஒருவாறு தொகுத் துரைப்பான் இந்நூல் வெளியிடப்பட்டது.

"பதினோராந் திருமுறையில் சேர்க்கப்படாது அடிகள் பெயரால் வழங்கும் பிற்காலத்துச் செய்யுட்கள் அவரால் இயற்றப் பட்டனவாகத் தெரியவில்லை. எனினும் அவற்றுட் சிறந்தன சில இந்நூலுட் குறிக்கப்பட்டுள்ளன.பட்டினத்தடிகளின் காலமும் வரலாறும் இந்நூலின்கண் தெள்ளிதின் ஆராயப் பட்டுள்ளன” என்னும் குறிப்புகளை முன்னுரையில் கா. சு. குறிப்பிடுகிறார்.

வரலாறு, வரலாற்று ஆராய்ச்சி, பட்டினத்தடிகள் நூற் கருத்து, நிலையாமை, அடியார் பெருமை, சொன்னயம் என்னும் ஆறு தலைப்புகளில் நூல் இயல்கின்றது. பிற்காலத்துப் பட்டினத்தார், பட்டினத்தார் பாடல் திரட்டு என்பவை

ணைக்கப்பட்டுள்ளன.

பெருஞ் செல்வத்தில் திகழ்ந்தோர் பெருந்துறவு கடைப் பிடித்தமைக்குச் சிறந்த எடுத்துக்காட்டாவார் பட்டினத்தடிகளே என்னும் கா. சு. “பாரனைத்தும் பொய்யெனவே பட்டினத்துப் பிள்ளையைப் போல் யாரும் துறக்கை அரிதரிது” என்னும் தாயுமானார் வாக்கை எடுத்துக் காட்டி நூலைத் தொடங்குகிறார்.

பட்டினத்தாரின் தனிப்பெருஞ் சிறப்புகளையும், தனிப் பேராற்றல்களையும் பிழிந்து வடித்துத் தருகிறார் கா. சு.