உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 14.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

தமிழ்க் ‘கா.சு.' கலைக்களஞ்சியம்

89

முழு முதற் கடவுள் வரம்பில் ஆற்றலையும், அவ்வவர் பொருளால் நிற்கும் பெருந் தன்மையையும், சைவ சமயத்தின் விரிந்த நோக்கத்தையும், சிவனது திருவடிவத்தையும், உலக மாந்தர் இயல்பையும், யாக்கை நிலையாமையையும், பிறவித் துன்பத்தையும் விழுமிய முறையில் செவ்விதின் விளக்குவதிலும், உவமை நயத்தையும் ஆசிரியப் பாவின் பலனையும் உலகர்க் கறிவுறுத்துவதிலும் இணையற்ற ணையற்ற சிறப்பு வாய்ந்தவர் பட்டினத்தடிகள்.

66

அவர் பெருஞ்செல்வர், பெருவள்ளல், பெருங்கல்வியாளர், பெரும்பாவலர், பெருநாவலர், பெரு மெய்யுணர்ந்தவர், பெருந்துறவி, பேரருள் பெற்றவர், பேரின்பம் நுகர்ந்தவர், சிற்றின்பமறிந்தவர், சிற்றுயிர்க் கிரங்கும் சீராளர், சித்தம் சிவமாகச் செய்வன தவமாகப் பெற்றவர்.

பட்டினத்தடிகள் பாடல்கள் பதினோராம் திருமுறையில் உண்மையாலும், அதனை வகுத்தவர் நம்பியாண்டார் நம்பிகள் ஆதலாலும், அவர் காலம் அபயகுலசேகரசோழன் (கி. பி. 985) ஆதலாலும் அடிகள் அக்காலத்திற்கு முற்பட்டவர் என்பது தெளிவு. அக்காலம் ஒன்பதாம் நூற்றாண்டாகும். அருணகிரியார் காலம் 15 ஆம் நூற்றாண்டு. இவ்வாறாகவும் பட்டினத்தடிகளின் மைந்தர் அருணகிரியார் என்று வழங்கும் கதையும், அக்கதை புனைவின் சிறுமையும் ஒதுக்கத்தக்கன. பிற்காலத்தில் வாழ்ந்த பட்டினத்தார் ஒருவர் வரலாற்றை, அடிகளார் வரலாற்றொடு பின்னிப் பிணைத்து விட்டமையால் உண்டாகிய கேடே இஃதென்கிறார்.

அடிகளின் தந்தையார் சிவநேசர், தாயார் ஞானகலாம்பிகை, அடிகளின் குழந்தைப் பெயர் திருவெண்காடர். அடிகளார்க்கு ஐந்தாம் அகவை நடக்கும் போதே தந்தையாரை இழந்தார். கற்பன கற்று அருட்குருவரை நாடிச் சிவபூஜை மேற்கொண்டார். திருவெண்காட்டிலே ஒரு துறவோர் தந்த செப்பினுள் இருந்த பெருமானை வழிபட்டார். இறைவன் அருளாற் செல்வம் கிடைத்தது. சிவகலை என்பாரை மணந்து அறம் பல புரிந்து வாழ்ந்தார். மருதூர்ப் பெருமான் அருளால் ஒரு மகன் பிறந்தார். அவர்க்கு மருதவாணர் எனப் பெயர் சூட்டி வளர்த்தனர். மருதவாணர் கல்வியில் சிறந்து வளர்ந்தார். கப்பல் வணிகத்திற்குச் செல்ல விழைந்து வேண்டினார். கலமேறிச் சென்ற அவர், ஒரு தீவையடைந்து ஆங்குப் பொருள் தேடி அறப்பணிகளே புரிந்தார். அவரொடு வந்த வணிகர்கள் பிற நாடு சென்று பெரும்

6