உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 14.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90

இளங்குமரனார் தமிழ் வளம் – 14

பொருளுடன் திரும்பினார். மருதவாணர் எருவும், அவலுமே கப்பலில் நிரப்பிக்கொண்டு வந்தார். கடலில் புயல் கிளம்பிப் பன்னாள் அலைக்கழிக்க எருவால் நெருப்பூட்டி, அவலுண்டு அனைவரும் மீண்டனர். அவரை எதிர்நோக்கியிருந்த பட்டினத்தாரிடம் “மதிவாணர் மனநிலை திரியப் பெற்றனர்” என உடன் வந்தோர் கூறினர்.

மருதவாணர் இல்லத்திற்குச் சென்று, உணவு கொண்டு, அன்னையாரிடம் ஒரு பெட்டியைத் தந்து அடிகளிடம் தருமாறு கூறி வெளியே சென்றார். அடிகள் அப்பெட்டியை வாங்கித் திறந்து பார்க்க அதில், "காதற்ற ஊசியும் வாராது காணும் கடை வழிக்கே” என்னும் குறிப்பும் காதற்ற ஊசியும் இருக்கக் கண்டார். அதனைக் கண்ட அளவில் துறவு கொண்டார் அடிகளார். தம் கணக்கர் சேந்தனாரை நோக்கி, “செல்வ மெல்லாம் பிறர் கொள்ளத் திறந்து விடுக' என ஆணையிட்டார். அரசன் அடிகளை அடுத்து துறவு மேற்கொண்டதேன் என வினவ “நீர் நிற்க நாம் இருக்க' என்றார்.

அவர் தம் துறவையும், இரந்துண் வாழ்வையும் வெறுத்த உறவினர் நஞ்சு கலந்த அப்பம் தந்தனர். “தன்வினை தன்னைச் சுடும், ஓட்டப்பம் வீட்டைச் சுடும்” என்று வீட்டுக் கூரையில் சொருக வீடு எரிந்தது. பின்னர் அடிகள் திருவெண்காடு சென்றார். தம் அன்னையார் மறைந்த செய்தியறிந்து வந்த அவர்க்குக் கடனாற்றினார். பின்னர் தமிழ்நாட்டுத் திருக் கோயில் உலா மேற் கொண்டார்; அதனை முடித்து வடநாட்டுக் கோயில் உலா மேற்கொண்ட அவர், மாகாளம் என்னும் இடத்தில் நிட்டையில் இருக்க, அவர் கழுத்தில் திருடர்கள் சார்த்திய மாலை அரண்மனையில் இருந்து களவு போனதாக இருந்தமையால் கழுவில் ஏற்ற ஏற்பாடு செய்ய, அக்கழுவே எரிந்தது. அதனால் பத்ரகிரி என்னும் அரசன் தெளிவுற்றுத் துறவெய்த அடிகளின் ஆணைப்படி திருவிடைமருதூர்க்கு வந்து திருக்கோயில் மேலைவாயிலில் தங்கி இரந்துண்டு, எஞ்சியதை ஒரு நாய்க்கு இட்டிருந்தார். அடிகளார் அக்கோயில் கீழை வாயிலில் இருக்க அவரிடம் இரந்து வந்த துறவோரிடம் “மேலை வாயிலில் ஒரு குடும்பி உள்ளான், அவரிடம் போக” என, அதனை அறிந்த பத்ரகிரியார் அவ்வோட்டை நாய் மேல் எறிந்து உடை டக்க க்க நாயும் இறந்தது. பின்னர் அடிகளார் ஒற்றியூர்க்குச் சன்று தவநெறியில் நின்றார். ஒரு நாள் குழந்தையர்க்கு விளையாட்டுக் காட்டுவதாகச் சொல்லி ஒரு குழியுள் புகுந்து, மணலைத் தள்ளி மூடுமாறு செய்தார். அதிலே அடங்கி இலிங்க