உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 14.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாயுமான சுவாமிகள் வரலாறும் நூலாராய்ச்சியும்

இந் நூலானது, தாயுமானப் பெருந்தகையாரது வாழ்க்கை வரலாற்றினை ஆராய்ச்சியுடன் சுருக்கமாகவும், தெளிவாகவும் கூறுவதுடன், அப்பெரியாரது திருவருட் பாடல் தொகுதியுட் போந்த மெய்ந்நூற் கருத்துகள் அனைத்தையும் தொகுத்து வகுத்து விளக்குமியல்பிற்று.

கடவுள், உயிர், மனம், தத்துவம், பாசம் என்பவற்றைப் பற்றிய அடிகள் கருத்துகளை இதன்கண் தெளிவாகக் காணலாம். இறை வழிபாட்டின் இன்றியமையாமை உடற்சித்தி, உயிர்முத்திக்குத் துணையாதல், நால்வகைச் சாதன இயல்பு, பேரன்பர் திறம் முதலிய அரும் பொருள்களின் சார்பாய உண்மைகள் யாவும், இந்நூற்கண் தொகுக்கப்பட்டிருப்பதால் இதனைக் கற்போர் நற்பயன் அடைவர் என்பது என் நம்பிக்கை. இத்தகைய ஆராய்ச்சி நூல்களுள், துவே முதலாக வெளிவந்துளது” என்று நூல் முன்னுரையில் நூலாசிரியர். கா. சு, நூற்பிழிவைத் தருகிறார்.

ல்

திருநெல்வேலி மணிவாசகர் மன்ற வெளியீடாக 1930 வெளிவந்தது இவ்வாராய்ச்சி நூல். இவ்வெளியீட்டின் மூன்றில் ஒரு பங்குத் தொகையைத் தருமைத் திருமடத்தினரும், இருபங்குத் தொகையைத் திருநெல்வேலி ஆடைவணிகர் திரு. ந. சுப்பையாப் பிள்ளை என்பாரும் உதவியுள்ளனர். நூலுரிமையுரை அச்சுப்பையாப்பிள்ளை அவர்களுக்கே ஆக்கப்பட்டு அவர்தம் படமும் பதிக்கப் பட்டுள்ளது.

நூல், தாயுமான அடிகள் வரலாறு (1-29), முதற்கண் கொண்டுளது. பின், நூலாராய்ச்சி என்பது சமயம் (29-54) கடவுள் (55-103), உயிரியல்பு (103-115). மனவியல்பு (115-137). வினையியல்பு (137-157). தத்துவவியல்பு (155-162), வழிபாட்டியல்பு (162-176), சித்தரியல்பு (176-196), அத்துவித இயல்பு (196-212), பேரன்பியல்பு (212- 227) என்னும் பத்துத் தலைப்புகளில் இயல்கின்றது.