உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 14.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்க் ‘கா.சு.' கலைக்களஞ்சியம்

95

காலத்துச் சாமானியப் பாட்டுகளையே பட்டினத்தடிகள் பாடலெனத் திரியக் கொண்டு மயங்குகின்றார்கள்.

பிற்காலத்துப் பாட்டுகள் உலக அனுபவம் மிக்குடையராய்த் துறவிலுள்ள விருப்பத்தால் நிலையாமையையும், பிறவித் துன்பத்தையும் வற்புறுத்துகிறவராய்ப் பெண்டிரையும், யாக்கையையும் மிக இழிவுபடுத்தி உலக வழக்கு முறையிலே பழிக்கும் இயல்புடையவராய ஒருவராற் பாடப் பெற்றன. அவர் ஓரிடத்தில் விலை மாதர்பாற் செல்வதைத் தாங்கியும், பிறிதோரிடத்தில் அவர்களைத் தாக்கியும் பேசுகின்றவர். பனிக்கு மூடக் கந்தையும், பசிக்கு உண்ணப் பிச்சைச் சோறும், காம நினைவு எழுந்தால் விலை மாதரும் உண்டு என்று பேசுகின்றவர், திருவருள் பெற்ற பட்டினத்து அடிகள் ஆவரா?” எனத் தேர்ச்சி மிக்க திறத்தால் பட்டினத்தார் இருவராதலைப் பகுத்துரைக்கிறார். பாடல்களுள் ஒரு பொருள் பற்றியவற்றைத் தேர்ந்து அவற்றின் அமைதி, சொல்லாட்சி, பொருளாட்சி ஆகியவற்றின் வேறுபாட்டையும் எடுத்துக்காட்டுகிறார்.

இறுதியில் பட்டினத்தார் பாடல் திரட்டு என்னும் பகுதியில் மணிமணியான இருபது பாடல்களைத் தேர்ந்தெடுத்து வைத்துள்ளார்.

66

“ஓராதே அஞ்செழுத்தும் உன்னாதே பச்சிலையும் நேராதே நீரும் நிரப்பாதே யாராயோ

எண்ணுவார் உள்ளத் திடைமருதர் பொற்பாதம்

நண்ணுவாம் என்னுமது நாம்

என்பதொரு பாட்டு.

திருவிடை மும் 14.

'ஓதல் ஓவா ஒற்றி ஊர

சிறுவர்தம் செய்கையிற் படுத்து

முறுவலித் திருத்திநீ முகப்படும் அளவே." - திருவொற்றியூர் ஒருபா. 6.

என்பதொரு பாட்டின் இறுதி மூன்றடி.