உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 14.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94

இளங்குமரனார் தமிழ் வளம் – 14

திருக்கழுமலத்தைச் சக்கரவாள மலைக்கு உவமித்து, அந் நகர மாட மாளிகையினைப் பொதியமலைக்கு ஒப்பிடும் சிலேடை, சீர்காழிக் கோபுரத்தை வேதத்திற்கும், மேடையைச் சிவாகமத்திற்கும், தேர்வாவியை இந்திரனுக்கும் உவமை கூறுமிடத்துள்ள சிலேடை இன்னவற்றைச் சொன்னயப் பகுதியில் சுட்டுகிறார்.

பிற்காலத்துப் பட்டினத்தார் என்னும் பகுதியில், பட்டினத்தடிகளுக்கும், பட்டினத்துப் பிள்ளையார்க்கும் உள்ள வேறு பாட்டை நுணுகி ஆய்ந்து தெளிவிக்கிறார்.

பதினோராம் திருமுறையில் உள்ள பாடல்கள் அனைத்தும் உயர்ந்த செவ்விய நற்றமிழ்ப் பெருமித நடையில் அமைந்துள்ளன. அவற்றின் சொல்நடை ஆயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட செந்தமிழ்ச் சிறுகாப்பியங்களின் மொழியமைப்பினை ஒத் திருக்கின்றது. சிறுபான்மையே வடசொற்கள் விரவியுள்ளன. நன்மொழிப் புணர்ப்பும் செய்ய சொற்செறிவும் பெருமித ஓசை நயமும் அடிகள் திருப்பாடல்களில் அமைந்திருப்பது போலப் பிறர் பாடல்களுட் காண்டல் அரிது.

இரட்டுற மொழிதலின் சிறப்பும் நயமிக்க எளிய திரிபின் அமைப்பும் அவற்றுள் மிக இனிமை பயக்கும் வண்ணம் எடுத்தாளப்பட்டன. உவமை வளமும், ஒரு பொருளின் பல பகுதிகளுக்குப் பலவகை உவமைகளையும் தொடர்ச்சியாக எடுத்தாளும் திறமும், பெருந்தன்மை மிக்க விழுமிய முறையில் உண்மைக் கருத்துகளை விளக்கும் வன்மையும் அடிகட்கு அமைந்தமை போலப் பெரும் பாவலர் பலருக்கும் அமையக் கண்டிலம்.

பெருஞ் செல்வங்கள் அனைத்தையும், உயர்கல்விச் சீர்கள் அனைத்தையும் அருந்தவத்தின் பெரும் பயன் அனைத்தையும் ஒருங்கு நுகர்ந்த சொல்லின் செல்வராகிய இன்றமிழ் நல்லிசைப் பேரருட் புலவர் ஒருவரது அமுதச் செழும் பாடற்றொகுதிகளாக அடிகளது சிறுகாப்பியங்கள் காணப்படுகின்றன.

அவற்றோடு இற்றைக்கு இருநூறு அல்லது முந்நூறு ஆ ஆண்டுகட்குமுன் பட்டினத்துப் பிள்ளையார் என்று பெயர் வாய்ந்த சாமானியத் துறவியொருவரால் உலக வழக்கு மொழிகளைக் கொண்டு இயற்ற பட்ட பாட்டுகளையும் உடன் சேர்த்துப் பட்டினத்தடிகள் பாடலென்று பேசும் தப்பு வழக்கம் ஏற்பட்டு விட்டது. அறியா மாந்தர்கள் பிற்