உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 14.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்க் 'கா.சு.' கலைக்களஞ்சியம்

93

ஒருவனே மெய்யெனத் தோன்றுதல், சிவபெருமானுடைய தெய்வக் கூத்துக் காணப் பெற்று அவனது திருவடி அடைதலும், அவன் அடியார் கூட்டத்தை அணுகுதலும் ஆகிய பெறலரும் செல்வம் பெற்றமையால் தமக்கு எக்கேடு வந்தாலும் எந்நலம் வந்தாலும், வெறுப்பும் இல்லை விருப்பும் இல்லையாதல், தமது சிந்தையைத் தூய்மையாக்கி இறைவன் வீற்றிருக்கத் தக்க நிலையில் அமைந்து இறைவன் இறைவியுடன் அவன் இனிது வீற்றிருக்க வேண்டுமென்று குறையிரந்து கூறுதல், உயிர்கள் இறைவனுக்குத் தொல் பழமையே மீளா அடிமைகளாயிருத்தல், இறைவனை வழிபடுதற்கு மலர் கிடையாவிடத்துப் பச்சிலை உண்டு; அதுவும் நீரும் கிடையா இடத்து நெஞ்சுண்டு எனல்; உள்ளன்பே இன்றியமையாச் சாதனமேயன்றிப் பிறவல்ல எனல்; இன்னவை யெல்லாம் அடிகள் விரித்துக் கூறுதலைச் சான்றுடன் வரைகிறார்.

கூறுவார் போன்று

அடிகளார் தம் நெஞ்சிற்குக் நிலையாமையைக் கூறும் செய்தி: ஆசையால் மயங்கி மாசடைந்த மனமே,காணப்பட்ட பொருள்கள் மறையும், உட்கொண்டபொருள் மலமாம்; பூசப்பட்ட மணப் பொருள்கள் அழுக்காகின்றன; சேர்ந்தவை பிரியும்; நிறைந்தவை குறையும்; உயர்ந்தவை தாழும்; பிறந்தவை இறக்கும்; பெரியவை சிறியவாம். ஓரிடத்திலுள்ள ஒருபொருள் அந்த இடத்தில் தானே நிலைபெறாது; செல்வத் தொடு பிறந்தோரும், புகழொடு விளங்கினோரும், கல்வியிலே மேம்பட்டோரும், வீரத்திற் சிறந்தோரும், கொடையில் வள்ளல் களும், படைப் பயிற்சியில் வல்லாரும், குலத்தில் உயர்ந்தோரும், நலத்தில் மிகுந்தோரும், எத்தகைய எச் சிறப்புடையோரும் இறந்தோராயினர். அவர்கள் பேரும் உலகத்தில் நீடு நிற்க வில்லை. இதனால் நீ தெளிய வேண்டியது யாதெனில் உனக்கும் அக்கேடுதான் வருமென்பதே. (BIT GOT LOGOOF. 23).

அடியார் பெருமை என்னும் பகுதியில் மெய்யன்பர் உள்ளமே இறைவனது அம்பலம் என்றும், அன்பர் பணியே, பெருஞ் செல்வத்தினும் பேரின்பம் பயக்கும் என்றும், தொண்டர் வாழ்க்கையையும், இழிந்தோர் வாழ்க்கையையும் ஒப்பிட்டுப் பார்ப்பின் பெருங்கடலும் மாட்டின் குளம்படி நீரும்போலத் தோன்றுதலின், தொண்டருடைய தொண்டருக்கு அடிமை பூண்டு, அவரொடு நெடுநாட் பழகிக் கீழ்ப்படிந்து நடந்து, அவர்கள் காலாற் சுட்டிய ஏவலைத் தலையேற்று, அதனால் பெறும் பயனை அடைவதல்லது வேறு பயன் யாதும் இல்லை என்பதைத் தொகுத்துரைக்கிறார்.