உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 14.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98

இளங்குமரனார் தமிழ் வளம் 14

பின்னர் அவர் இயற்கை எய்த, அக்காலையில் புலமையாலும், இறைமையாலும் தந்தையினும் மிகச் சிறந்து விளங்கிய தாயுமானவரையே பெருங்கணக்கராக அமைத்துக்

கொண்டார் முத்து வீரப்பர்.

அரசுக் கடமையில் அடிகள் செவ்விதின் ஈடுபட்டாலும், உலக நிலையாமையுணர்ந்து பேரின்பப் பேற்றையே பெரிதும் விழைந்து விளங்கினார். இளமையிலேயே இறைவன் தம்மைப் பித்துக் கொள்ளும்படி செய்தமையை உணர்ந்து உருகினார். திருவருளை அடையும் தகுதியும், பேறும் தமக்கு இல்லையோ என ஏங்கினார். இயற்கையின் வடிவில் இறைவன் திகழ்தலைக் கண்டு கண்டு கனிந்து உருகியும், கண்ணீர் பெருகியும் பாடினார். அடிகள் பணி திரிசிரபுரம் திருக்கோயில் பணியாக அமைந்து ஆங்கே தங்கினார்.

இந்நிலையில் தருமபுரத் திருமட அருளுரை பெற்ற மௌன குரு தேசிகர் என்பார், திரிசிரபுரத்தில் சாரமா முனிவர் மடம் என்னும் மடத்தில் தங்கித் தம்மை நாடிவந்த மாணவர்க்கு அருளுரை நல்கியிருந்தார். அவரை ஒருநாள் கண்ட அடிகள் உளங் கவரப் பெற்றார். மௌனகுரு அவர்க்குத் திருவருள் சார்த்தினார். அதுமுதல் சித்தாந்த நூல் கேட்டல், சிந்தித்தல், தெளிதல், நிட்டை கூடல் என்னும் நான்கினையும் மேற்கொண்டு விளங்கினார். அக்காலத்தும், எக்காலத்தும் அவர் பாடிய பாடல்களை அவர்தம் சிற்றன்னை புதல்வராய அருளையப் பிள்ளை என்பார் எழுதிப் பாதுகாத்து வந்தார்.

மன்னன் 1625 - இல் உலகு நீத்தான். அரசு அரசியின் ஆட்சிக்கு வந்தது. அவர் தாயுமான அடிகளை அழைத்துப் பெரிய கணக்கு வேலையைப் பார்க்க வேண்டினார். அதனை ஒருவாறிணங்கி ஏற்றனர். ஆனால், அரசியார் உட்கோள் தாயு மானார்க்கு ஒவ்வாமையால் ஊர் துறந்து, நல்லூர் எய்தினர். புறப்பட்ட விரைவில் பூசைப் பெட்டியையும் எடுத்து வந்திலர். அதனை, அருளையர் எடுத்துக் கொணர்ந்த பின்னரே, வழி பாடாற்றி உண்டனர் என்றும், ‘பண்ணேன் உனக்கான பூசை’ என்னும் பாடல் அதுகால் பாடிய தென்றும் கூறுவர்.

விராலிமலையில் அடிகளார் சிலகாலம் தங்கினர் என்றும் அவர்க்கு உதவிய குடும்பத்தவர் 'தாயுமான’ என்னும் அடை மொழியை இன்றும் வழங்கி வருகின்றனர் என்றும் பின்னர், இராமேச்சுரம் சென்று திருமறைக் காட்டுக்குத் திரும்பி,