உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 14.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்க் ‘கா.சு.’ கலைக்களஞ்சியம் ஓ

99

னர்

அன்னையாரும், தமையனாரும் கட்டாயப்படுத்தித் திருமணம் செய்வித்தனர் என்றும், அவ்வம்மையார் கனகசபாபதி என்னும் L மகனைத் தந்து இறையடி எய்தினார் என்றும், அம்மைந்தனைத் தமையனாரிடம் ஒப்படைத்துக் கடுந்துறவு கொண்ட காண் அடிகள் என்றும், மெளன குருமடத்துத் தலைவராகச் சில காலம் இருந்து இறுதியில் இராமநாதபுரத்திற்குக் கீழ்பால் அமைந்த காட்டூரணிப் புளியமரத் தடியில் நிட்டை கூடிச் சமாதியுற்றனர் என்றும் கூறுகின்றார்.

66

தை

‘அடிகள் நிட்டை கூடியகாலை அவர் திருமேனி பன்னாள் உயிர் நீத்த உடல் போல் தோன்றினமையால், யாரோ அதற்கு நெருப்பிட்டனர் எனவும், இடையில் விழித்துப் பார்த்துப் பின்னும் நிட்டையிலமர்ந்து இறைவனோடிரண்டறக் கலந்தனர் எனவுங் கூறுப. அதன் உண்மை நன்கு விளங்கவில்லை. எவ் வாறாயினும் கி. பி. 1662 - க்கு ஒத்த சாலிவானக சகாப்தம் 1584 இல் தைமாதத் 28 ஆம் தேதி விசாகத்தன்று மாலை அடிகள் கடவுள் திருவடியில் கலந்தனர்” என வரலாற்றை நிறைவிக்கிறார் கா. சு. அடிகள் சமாதியான இடத்தில் அவர் முத்தியடைந்த நாளைக் குறிக்கும் கல்வெட்டுண்மையையும் கூறுகிறார்.

வரலாற்று ஆராய்ச்சி என்னும் பகுதியில் 1608 முதல் 1662 வரை அடிகள் காலம் என்றும், கேடிலியப்பன் என்ற பெயர் தனித் தமிழாயிருப்பதும் இக்காலத்தில் அத்தகைய பெயர்கள் அரியவாயின என்றும், கடவுளை வேண்டி மகப் பெறுவோர் தாம் பெற்ற பிள்ளைக்கு, வழிபட்ட கடவுட் பெயரையிடும் வழக்கத்தை மேற்கொண்டனர் என்றும், அடிகள் எவ்வுயிர்க்கும் இரக்கம் வைத்தல் வேண்டுமென்பதைத் தமது சொல்லாலும், செய்கையாலும் உலகிற் குணர்த்தினராதலின் அவர் யாவர்க்கும் தாய் போன்றவரே; நமக்கு மெய்யறிவுச் சுடர் கொளுத்தலால், தந்தையும் அருளொழுக்க முடைமையால் தாயும் ஆதலின் பெயராலன்றிச் செயலாலும் அடிகளுக்குத் தாயுமானவர் என்ற பெயர் பெரிதும் பொருந்தும் என்றும், அடிகள் திருப் பாடல்களிலே வடமொழிகள் மிகப் பயின்றுவரினும் அவை செந்தமிழ்ச் சுவையிற் குறைவு பட்டில என்றும், அடிகளது தெளிபளிங்கன்ன தூய உள்ளமும் தாழ்வென்னும் தன்மையும், வீடு பேற்றின் கண்ணுள்ள பேரவாப் பெருக்கும் பதார்த்தங்கள் பாராது பரமே பார்க்கும் பெருநோக்கும் புனிதப் புனற் பெரு வெள்ளம் போன்ற சொல்லாற்றலும் அவர் திருப்பாடல்களிலே தெள்ளிதின் மிளிர்கின்றன என்றும், அடிகள் அரசி வலையில்