உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 14.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102

இளங்குமரனார் தமிழ் வளம்

14

“பாதி விருத்தத்தால் இப்பார் விருத்த மாக வுண்மை சாதித்தார்’”

எனப்பட்டவர், அருணந்தி சிவாச்சாரியார் என்றும், பாதிவிருத்தம் என்றது சிவஞான சித்தியார் எட்டாம் நூற்பா முப்பதாம் பாட்டின் முதற்பாதி என்றும், அது :-

66

'அறியாமை அறிவகற்றி அறிவினுள்ளே

அறிவுதனை அருளினான் அறியாதே அறிந்து”

என்பது என்றும் நிலைப்படுத்துகிறார்.

அன்பின் இயல்பை அடிகள் எந்நாட் கண்ணியல் விரித் துரைக்குமாற்றை அன்புக் ‘கா. சு. தொகுத்துரைக்கிறார்:

உள்ளமானது கதிரவனைக் கண்ட கமலம் போல் திரு வருளைக் கண்டபோது மலர்தல் வேண்டும். மேகம் கண்ட மயில் போல இறைவனது ஞான நடனத்தைக் கண்டு களித்தாட வேண்டும். திங்களொளியை நாடிச் செல்லும் சக்கரவாளப்புள் போலத் தூய அறிவிலே தோன்றும் பரஞ்சோதியை உயிர் நாட வேண்டும். அந்தரத்தே நின்றாடுகின்ற ஆனந்தக் கூத்தனுக்கே சிந்தையினைத் திறையாகக் கொடுத்து வணங்க வேண்டும். கள்ளன் இவனென்று கைவிடாதேயென்று வள்ளலைக் கூவி வருந்த வேண்டும். அண்ணா வாவென்றரற்ற வேண்டும். செய்வதெல்லாம் நின்பணியென்று மாதேவனை வழுத்தல் வேண்டும். பரம் பொருளைக் கண்டும் காணேனென்று கை குவித்தல் வேண்டும். இன்பம் எங்கே எங்கே என்றிரங்க வேண்டும். கடல் மடை திறந்தாற் போலக் கண்ணீர் பெருகி ஆறாகச் செல்ல உடல் வெதும்பி மூர்ச்சித்து உருக வேண்டும். இறைவனைக் காணாத முகம் சருகாய் வாடி அலந்து ஏங்க வேண்டும். மனக்கவலை ஆற்றாது இறைவன் பொன்னடியைப் போற்றி ஆற்றேன் ஆற்றேன் என்று அரற்ற வேண்டும் என்கிறார்.

இறையை என்றும் மறவாமையைத் தாயுமானவர் வேண்டு முறையைக் கா. சு. தொகுத்துக் கூறுவதைக் கூறி, அவருள்ளமும் அவ்வாறு அமைதலை நாடினார் என்பதை நினைவு கூர்ந்து அமைவாம்.

‘பூங்கொத்துள் விரிந்து மணங் கமழும் பொழில்களிலே நல்ல நிழலில் தங்கி இருந்தாலும்,

குளிர்ந்த இனிய நீரினைக் னிய நீரினைக் கையினால் அள்ளி உட் கொண்டாலும், அந்நீரிடை முழுகி விளையாடினாலும்,