உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 14.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்க் ‘கா.சு.’ கலைக்களஞ்சியம் ஓ

101

மாக இருப்பது, உலகிற் கண்டவற்றை மனம் தன்னிற் பதிவு செய்து மீண்டும் உயிர் அவற்றை நினைப்பதற்குக் காரணமாய் இருத்தல் மாயையாம் என்பனவற்றையும் பிறவற்றையும் அடிகள் வாக்குகளைக் காட்டி நிலைநிறுத்துகிறார்.

மூலவினை, இருவினை, முன்வினை (சஞ்சிதம்), முள்வினை (பிராரத்தம்), செய்வினை (ஆகாமியம்) என்பவற்றை வினை யியல்பில் விரிய விளக்குகிறார்.

தத்துவ இயல்பு என்னும் பகுதியில் 96 தத்துவங்கள் இவையென விளக்குகிறார். வழிபாட்டியல்பில் மாந்தர்ப் பிறவியின் சிறப்பு, கொல்லாமை, கல்வி, ஒழுக்கம், உலகநெறி, தவ நெறி, சித்தநெறி, முத்திநெறி, பத்திநெறி என்பவற்றைக் றுகிறார். ஒரு பிறவியிலேயே முத்திக்குரியராதல், காயசித்தி, அட்டாங்கயோகம் ஆறாதாரம் என்பன சித்தரியல்பு என்னும்

ரு

பகுதியில் விரிக்கப்படுகின்றன.

ஏகம், அத்துவிதம் என்னும் இருவகைச் சொல் ஆட்சிகளில் அத்துவிதம் என அடிகள் கூறியதன் சிறப்பை அத்துவித இயல்பு என்பதில் கூறுகிறார்.

கடவுளும் உலகமும் பொருட்டன்மையால் வேறாயினும், கலப்பால் வேற்றுமை தோன்றாவாறு கடவுள் உலகத்தோடு கலந்திருக்கிறார் என்று அறிவுறுத்தற்கெனத் தெரிந்து, அத்துவித பாவனை செய்வதே ஞானநெறியாதலின் அவ்வாறன்றிக் கடவுளும் உலகமும் வேறல்ல எனக் கருதி ஏகான்மவாதங் கோடல் தவறாகுமாதலின், அத்துவிதம் என்ற சொல்லின் பொருள் தெரிந்து சிவத்தோடு அத்துவித பாவனை செய்ய வேண்டும் என்றார் என்கிறார்.

அன்பர் உள்ளம் இறைவற்குக் கோயில்; அன்பர் இணக்கமே எவற்றினும் சிறந்தது; அன்பர் இணக்கம் திருவருளாலே அமையும்; அன்பர்க்கு இறைவன் பலவழிகளிலும் எளிவந்தருள்வன்; அன்போடு தண்டமிழ் மாலை தொடுக்கின்றவர்களது குறைகளைச் சிறிதும் பொருட்படுத்தாது இறைவன் திருவருள் புரிவான்; என்பவற்றைப் பேரன்பின் இயல்பு என்னும் பகுதியில் விரித்து விளக்குகிறார். மேலும் கல்லால நிழலில் அருள் பெற்ற நால்வர் சுகர், மார்க்கண்டன், மெய்க்கண்டதேவர், அருணந்தியார். சமயகுரவர் நால்வர், பட்டினத்தார், அருணகிரியார், சிவவாக்கியார், திருமூலர், இன்னோர் சிறப்புகளையும் எடுத்துரைக்கிறார்.