உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 14.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

குமரகுருபர அடிகள் வரலாறும் நூலாராய்ச்சியும்

குமரகுருபர அடிகள் வரலாறும் நூலாராய்ச்சியும் என்னும் நூல், திருநெல்வேலி வடக்கு ரத வீதி மணிவாசக மன்றத்தினின்று 1932 இல் முதற் பதிப்பாக வெளிவந்தது.

66

இந்நூல் இயற்றப்பட்ட காரணத்தை முன்னுரையில் சுருக்கமாகவும் செறிவாகவும் கா. சு. தெரிவித்துள்ளார். இச்சிறு உரைநடை நூல், செந்தமிழ்ச் சைவப் பேரருட் பெரியாருள், வரலாற்று முறையிற் பார்க்குங் காலை இறுதியாய்ச் சைவ நலத்தையும் தமிழ் மாண்பையும் பனிமலை முதல் குமரிவரை நிலைநாட்டிய குமரகுரு முனிவரது வரலாற்றினைத் தெளிவாக எடுத்தியம்புவதுடன், அதனையும் அடிகள் அருள் நூல்களையும் வத்து விளக்கும் பொருட்டு இயற்றப் பெற்றது” என்பது அது. “15.4.32 திருநெல்வேலி கா. சுப்பிரமணியன் என நாளும் இடமும் பெயரும்

ஆராய்ச்சி முறையின்

பொறித்துள்ளார்.

""

இந்நூலின் உரிமையுரை கா. சு. வின். பாவன்மையைப் பளிச்சிட்டுக் காட்டுகின்றது. நூல் அச்சிட்ட செலவில் பெரும்பால் வழங்கிய பெற்றியர் பொன்னம்பலநாத முதலியார் புகழ் கூறும் அது, முப்பத்திரண்டடிகளான் அமைந்த நிலை மண்டில அகவலாய்த் திகழ்கின்றது. உரிமையுரையுடையார், திருவைகுண்டத்தவர் என்பதும், வழக்கறிஞர் என்பதும், மருத்துவமனை முதலாம் அறச்சாலை அமைத்தவர் என்பதும், அறுபான் ஆண்டு விழாவாம் மணிவிழாக் கண்டவர் என்பதும் உரிமை உரையால் அறிய வருகின்றன.

அடிகள்

166 பக்கங்களையுடைய இந்நூல் முப்பகுப்புகளால் யல்கின்றது. குமரகுருபர வரலாறு (1-17). வரலாற்றாராய்ச்சி (18-32.) குமரகுருபர அடிகள் நூல்களின் ஆராய்ச்சி (33-166) என்பவை அவை.

முதற்பகுதியில் 19 உட்டலைப்புகளும், இரண்டாம் பகுதியிலே 16 உட்டலைப்புகளும், மூன்றாம் பகுதியிலே