உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 14.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்க் 'கா.சு.' கலைக்களஞ்சியம்

105

103 உட்டலைப்புகளும் இடம் பெற்றுள. நூல் உள் உறையை உட்டலைப்பு வரன்முறையாக நூன் முகப்பிலே ஆறுபக்க அளவில் தந்திருப்பது ஆய்வாளர்க்குப் பெரும் பயன் செய்வதாம்.

பெரும்பாவலராகிய திரிசிரபுரம் மீனாட்சி சுந்தரம், பிள்ளை இயற்றிய குமரகுருபரர் சரித்திரத்தைத் தழுவித், தம் நூலை இயற்றுவதாகக் குறிக்கிறார். கா. சு (2).

L

திருவைகுண்டம் என்றும் திருக்கயிலாயம் என்றும் வழங்கப் படும் நகரிலே சண்முக சிகாமணிக் கவிராயர் - சிவகாமியம்மை தவமகவாகக் குமரகுருபரர் பிறந்ததும், ஐயாண்டு வரை மூங்கையாக இருந்ததும், செந்திற் பெருமான் திருவருளால் பேசும் ஆற்றலுடன் பாடும்பேறும் உற்றதும், அப்பேறு பெற்ற போழ்திலேயே சுந்தர் கலிவெண்பா, இயற்றியதும், கயிலையாகிய தம் ஊர்ப் பெருமான் மீது கயிலைக் கலம்பகம் பாடியதும், திருக்கோயில் உலாக்கொண்டதும், மதுரைக்கு வந்தபோது திருமலை மன்னர் செய்த சிறப்பும், மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ், மதுரைக் கலம்பகம், நீதிநெறி விளக்கம் ஆகியவை இயற்றியதும், தருமபுரத் திருமடத்துத் தலைவராகிய மாசிலாமணி தேசிகரைக் குருவாகக் கொண்டதும், அவர் மேல் பண்டார மும்மணிக் கோவை பாடியதும், பின்னர் திருக்கோயில்கள் பலவற்றை வணங்கி நூல்கள் இயற்றிக் காசியை அடைந்ததும், அந்நாளில் ஆங்கிருந்த முகமதிய மன்னனை அவன் மொழியால் வயப்படுத்தித் திருமடம் கண்டதும், சைவப்பயிரை நன்கனம் போற்றி வளர்த்ததும் ஆகிய செய்திகளை நிரலேயுரைத்து, திருப்பனந்தாள் திருமடம் உருவாகி ஆட்சி கொண்டவர் நிரலுடன் வரலாற்றை நிறைவிக்கிறார்.

வரலாற்று ஆராய்ச்சிப் பகுதியிலே, அடிகள் கி. பி. 1630-48 இல் தென்னாட்டில் வாழ்ந்தனர் என்று ஆய்ந்துரைக்கிறார். அடிகளைக் குட்டித் திருஞான சம்பந்தராகக் காண்கிறார். பிள்ளைத் தமிழ், குறம், கலம்பகம் முதலிய சிற்றிலக்கிய ய வகைகளின் அமைதியை விளக்குகிறார். (21-24).

‘அடிகள் அருட்கவி இலக்கணங் கற்றவரல்லர் என்று ஒரு புலவர் குறை கூறியதைச் சிலர் அடிகட்கு அறிவித்துச் சிதம்பரச் செய்யுட் கோவை பாடும்படி வற்புறுத்தினமையால் அதனைப் பாடினர் என்பர்” என்று கூறுகிறார். (24).

திருமலை மன்னர் ஒருநாள் உணவு கொள்ளப் பொழுது தாழ்த்ததை அறிந்த அடிகள் ‘வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி, தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது' என்னும் குறளைக்