உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 14.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106

இளங்குமரனார் தமிழ் வளம் – 14

கூறினாராக. அதனை உணர்ந்த மன்னர் ‘எளிமையும் சுருக்கமும் அமைந்த நீதிநூல் ஒன்று பாடித் தருக' என வேண்ட, அடிகள் நீதி நெறி விளக்கம் பாடித் தந்தார் என்னும் செய்தி கூறப் படுதலை உரைக்கிறார்.

66

ஐந்து பேரறிவும் என்னும் பாடற்குப் பொருள் கூறத் தடை நேர்ந்தமையால், மாசிலாமணி தேசிகரைக் தேசிகரைக் குருவாகக் காண்டவர் அடிகள் என்பது வரலாறு. அப்பாட்டின் சொற்பொருளை அடிகள் உணராதவரல்லர்; அதன் அனுபவப் பயனையே தேசிகர்பால் உணர்ந்தனர்” என்கிறார் கா. சு. மேலும், பெருந்தவத்தினராகிய அடிகட்கும் அறிவுரை நல்கும் பெருந்தகையாரை யுடைத்தாயிருந்த ஆதீனத்தின் பெருமை இற்றைக் காலத்துக் குன்றினமை கழிவிரக்கந் தருவதே” என வருந்தியுரைக்கிறார். (26).

உலகப் பெருஞ் செல்வத்திற் பிறங்கினாலும், அடிகளைப் போலத் தாழ்மை மிக்க தூய பேரன்பிற் சிறந்த உள்ளமுடையார் வேறொருவருமிலர் என்பது பண்டார மும்மணிக் கோவையால் தெள்ளிதில் புலனாம் என மதிப்பிட்டுரைக்கின்றார் கா.சு.

66

அடிகள் காசியிலே மடமமைத்துச் சைவத்தை நிலை நாட்டாவிடின், தென்னாட்டுச் சைவ சித்தாந்தம் ஒன்று உண்டு என்பதை வட நாட்டினர் அறிதற்கு இடமிராது."

"மகம்மதியர் ஆட்சி, திறம் பெற்றிருந்த அக்காலத்திலே காசிக்குச் செல்லும் சைவர்க்கு வசதிகள் அமைதல் எளிதன்று.

"மொழியும் குலமும் சமயமும் வேறாக உடைய மக்கள் கூட்டத்தின் நடுவே, எல்லா வசதிகளும் அமைத்து விசுவேசரை வணங்கும் பேறுதந்த பெருமான் குமரகுருபர முனிவரே என்பது சைவருள்ளத்திலே என்றும் நின்று நிலை பெறுதற்குரியது."

என அடிகள் தொண்டுகளில் அள்ளுறி நின்று விளம்பு கிறார் கா. சு. (26-7)

ஓர் ஏக்கத்தையும் இவ்விடத்திலே உரைக்கிறார் கா. சு. அடிகட்குப் பின் வந்தோர், காசியிலே செந்நெறி கடைப் பிடித்துச் சைவத்தை நிலை நாட்டியிருப்பின் இன்று வடநாடு முழுதும் சைவசித்தாந்தம் பரவியிருத்தல் கூடும். பின் வந்தோர் பொருளீட்டத்தையும் பாதுகாப்பையும் கருதித் தென்னாட்டிலே தமக்கு நிலையான இடத்தை அமைத்துக் கொண்டனர் போலும் என்பது அது.