உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 14.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்க் ‘கா.சு.' கலைக்களஞ்சியம்

107

அடிகள் திருச்சியில் வைணவத்தையும், திருவாரூரில் சிவசமவாதத்தையும், தில்லையில் ஏகான்மவாதத்தையும் காசியில் துருக்க மதத்தையும் தழுவிய மக்களோடு வாதிட்டு வென்றனர் என்ற செய்தி விளக்கத்துடன் (28-32) வரலாற்று ஆய்வை நிறைவுறுத்துகின்றார்.

அடி. கள் நூல்களின் ஆராய்வே நூலில் ஐந்தில் நான்கு பங்காக இயல்கின்றது. தனித்தனி நூல்வகை ஆய்வு மேற் கொள்ளாமல் பொருள் வகை ஆய்வினை மேற்கொள்கிறார். பழமறை, இறைவன் இலக்கணம், இறைவனது மூவுருவம், ன்னவாறு பன்னூற் கருத்துகளையும் திரட்டி அடிகளின் கொடைவளம் அனைத்தையும் பொருள் வகைத் திரட்டாகத் தருவார் போல் தருகிறார்.

“கந்தர்

கலிவெண்பாவினுள்,

குமரகுருபரர் சைவ சித்தாந்தக் கொள்கைகளைத் தொகுத்துரைத்தமை போலப் பிறர் எவரும் சிறுதுதி நூலுள் அவற்றை இயம்பவில்லை என்பது அந்நூலைப் பற்றிய அரிய மதிப்புரை.

சக்தி சிவமென இருபகுப்பும் தன்பால் உடைமையால் இறைவனை ஒருவன் என்று கூறுதலும் தவறு, ஒருத்தி என்றலும் தவறே. ஒருவர் என்ற பொதுப்பெயரே ஏற்றது (சி. செ. கோ. 54) என்பதை நயக்கிறார் (41).

இறைவன் உயிர்களின் பொருட்டு இயற்றியருளிய பெருஞ் செயல்களை வியப்புச் செயலாகப் பாராட்டுதல் அத்துணைச் சிறந்த முறையாகாது. அவை அவனது பெருங்கருணைத் திறனைக் காட்டுமேயன்றிப் பேராற்றலைக் காட்டுவனவாகா என்று கருதுபவர் அடிகள் என வியக்கிறார் (46).

தமிழ்ச் சிறப்பு என்னும் உட்டலைப்பிலே, அடிகளார் தமிழின்பாற் கொண்ட பேரன்பைச் சான்றுகள் காட்டிக் காட்டித் திளைக்கிறார் கா. சு. தமிழ் அடைமொழியாக வருவன வற்றையும் திரட்டுகிறார். “தமிழ் மதுரையில் ஒரு குமரி; தமிழ் மதுரைக் கொற்றியார்; மும்மைத் தமிழ்க் கூடல்; முத்தமிழ் வெற்பு; அறம் வளரும் தமிழ்க் கூடல்; விரிதமிழ்க் கூடல்; தெளிதமிழ் மதுரை; செஞ்சொற்றமிழ்க் கூடல்; தெய்வத்தமிழ்க் கூடல்; தமிழ்வேளூர் அடிகேள் தமிழ்க்கமலை.

“தமிழொடு பிறந்து பழமதுரையில் வளர்ந்த கொடி” என அம்மையைக் கூறுவதும், “தென்னன் தமிழின் உடன் பிறந்த