உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 14.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108

இளங்குமரனார் தமிழ் வளம் 14

சிறுகால்” எனத் தென்றலைக் கூறுவதும் தமிழின் பழமைச் சான்று என்று ஆய்ந்துரைக்கிறார்.

திருமால் திருவிழாக் கொண்டருளும்போது, திருவாய் மொழி ஓதுவார் பெருமாளுக்கு முன் செல்ல, வடமொழி வேதமோதுவார் பின் செல்வது, பெருமாள் தமிழ் மறையை விரும்பி அதற்குப் பின்போக வடவேதம் பெருமாளைத் தேடி அவரைப் பின்தொடர்ந்து முறையிடுதல் போலும் என்பார். பழமறைகள் முறையிடப் பைந்தமிழ்ப் பின் சென்ற பச்சைப் பசுங் கொண்டலே" என்றார் என்கிறார் கா. சு. கணிகண்ணன் திருமழிசையாழ்வார் கதையொடு தொடர்பு படுத்தி வழங்கப் படும் செய்தியை வழக்கொடு படுத்தித் தெளிவிக்கும் அருமையராகக் கா. சு. விளங்கும் காட்சி இவண் பொலிகின்றது (95).

66

நீதிநெறி விளக்கத்தைத் தனித் தலைப்பிலே விளக்கிச் செல்கிறார். கா. சு. (98-118). கல்வி, செல்வம், புகழ், சொற்பயன், நட்பு, காதலொழுக்கம், முயற்சி, வேந்தன் கடமை, தவம் எனப் பகுத்து அதனை விளக்குகிறார்.

அறம் னையதென்றறிதற்குக் கல்வி வேண்டுமாகலின், அதன் பெருமையை முதற்கண் வைத்தார் என வைப்புமுறை காட்டுகின்றார் (98).

இழிந்த உவமை கூறிச் சிறப்பான கருத்தைத் தெரிவித்தல் ஓர் அழகாக நீதிநெறி விளக்கத்தில் காணப் படுவதை எடுத்துக் காட்டுகிறார் கா. சு.

வள்ளல் தன்மையில் தலை சிறந்தவர் செல்வம், பொது நலம் போல யாவர்க்கும் பயன்படும். பிறர் செல்வம் குலமகள் நலம் போல உடையார்க்கே பயன்படும்.கடை யார்க்கே பயன்படும். கடை மக்கள் செல்வம், கைம்பெண்டிர் நலம் போல ஒருவர்க்கும் பயன்படாது என்பது அது (செய். 66) பெரும்பாலான பாடல்களுக்கு எளிய பொழிப்புரை எழுதுவது போல் எழுதிச் சொல்கிறார் கா. சு.

கற்பனை நயத்தை விரிவாக ஆயும் ஆசிரியர் (118-141) அடிகளின் எல்லாப் படைப்புகளையும் தொகுத்துப் பார்க்கும் பார்வையையே மேற்கொள்கிறார்.

மகளிர் இடை

டை

பண் ார மும்மணிக்கோவையில் யைப் பற்றிக் கூறும் அடிகள் “ஈயாமாக்கள் தீமொழி கவர்ந்த சிற்றிடை என்பதை எடுத்துக் காட்டுகிறார். ஈயா மாக்கள் இல்லை' என்னும் தீயமொழி கூறுவர். அம் மொழியைக்