உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 14.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110

இளங்குமரனார் தமிழ் வளம் – 14

கூத்தப் பெருமான் தில்லைத் திருக்கோயில் தாமரை, திருமன்று பொருட்டு; மதில்கள் இதழ்கள் மாடங்களில் தங்கும் முகில் வண்டு! என்னும் உவமை (சி. மு. கோ2)யும்.

கருவிரல்மந்தி பலாப்பழத்தைத் தன் மடியில் வைத்து நகங்களால் சுளைகளை எடுத்து வாயிற் போடுவது, தூணிலே தோன்றிய நரசிங்கம் இரணியன் மார்பம் பிளந்தது போன்றது (தி. நா. மா. 5) என்பதும் அவற்றுக்கு ஒவ்வொரு சான்று.

66

அடிகள் பாடிய அகப் பொருட்டுறைப் பாடல்களில் இறைவன் திருவருள் பெற விரும்பிக் காதலுற்றவரின் பிரிவாற்றாமையும் துயரமும் த உணர்த்தும் துறைகளே

சிறப்பிடம் பெறுகின்றன என்று தெளிகிறார் காசு.

மதியினைப் பழித்தல் என்னும் துறை நயத்தை காசிப் பெருமானது நெற்றி விழியும் இடப்பால் விழியும்வெண்ணெருப்பே; நெற்றி விழி காமனைக் காய்ந்தது. காமன் படை நாமென்று எண்ணி நெற்றி விழிக்கு இனமான இடப்பால் விழி நம்மைக் காய்கின்றது போலும் என்று ஒரு ரு நங்கையுரைப்பதை

(காசிக்க. 27) எடுத்துக் காட்டுகிறார்.

66

இரவாகிய கரிய எருமை மீதேறி, மதியாகிய கொடுங் கூற்றம் என் உயிரைப் பருகுதற்கு, நிலாக் கதிராகிய பாசத்தை வீசி வளைந்து கொண்டது. யான் இங்கு என்ன செய்வேன்” என்பது மற்றொன்று (காசிக்க. 76).

கரும்பை வேம்பென்றும், வேம்பைக் கரும்பென்றும் தலைவி கருதுதலை அடிகள் வாக்கால் சுட்டுகிறார்:

"தேனறாத சிலைக்கரும்பு கொலைக்கரும்பு வேம்பெனும் தேம்புயத்தணி வேம்பினைக்கனி தீங்கரும்பெனும்”

என்பது அது.

66

(மதுரைக். 50).

"குறுமுகை வெண்டளவின்' என்னும் பாடலில் வரும், மணந்துவக்கும்; உருத்திகழும்; உகப்படரும், அகன்றிரியும் என்பவற்றின் இரட்டுறலழகையும் பிறவற்றையும் காட்டி அடிகளின் சொன்னயச் சிறப்பில் சொக்குகிறார்.

-

மணந்துவக்கும் வாசனை தொடங்கும்; மணம் செய்து

மகிழும்.

ருத்திகழும் - உருவிளங்கும் ; கோபித்து இகழும்.