உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 14.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்க் ‘கா.சு.' கலைக்களஞ்சியம்

111

உகப்படரும் - உவப்பினை அழிக்கும்; சிந்தும்படி பரவும் அகன்றிரியும் - அகமாகிய உள்ளம் திரியும்; நீங்கியோடும். என்பணியே - எலும்பு அணியே; என் பணிவிடையே.

மதங்கி, பிச்சி, கொற்றி, இடைச்சி, வலைச்சி என்போரைப் பற்றிய கலம்பகப் பாடல் அக்கால வழக்கங் காட்டுவது என்றும் கைக்கிளை நயமிக்கது என்றும் கூறுகிறார்.

மதங்கி என்பாள் இருகைகளிலும் வாள் வைத்து வீசிக் கொண்டு சுற்றி விளையாடுதல் மதங்கியார்.

பிச்சி என்பாள் சிவ வேடந் தாங்கிப் பிச்சைக்குச் செல்வது போல் அமைத்தல் பிச்சியார்.

கொற்றி என்பாள் திருமாலின் சின்னங்களை அணிந்து ஐயம் எடுக்கச் செல்லல் போல் அமைத்தல் கொற்றியார்.

-

இவ்வாறு இத்துறையாளரை விளக்குகிறார் கா. சு.

ஆணும் பெண்ணும் கூடிய இறைவன் திருவுருவத்தை ‘எந்தாய்’ என்றதன் நயத்தை (எம் தாய், எந்தையே) உவக்கிறார் சி. செ. கோ. 73). இரண்டு பிள்ளைத் தமிழ்களிலும் உள்ள அம்புலிப் பருவத்தின் நயத்தையெல்லாம் திரட்டித் தந்து நூலை நிறைவிக்கிறார் (162–166)

மீனாட்சியம்மை குறம், மீனாட்சியம்மை இரட்டை மணி மாலை என்பவை அடிகள் வாக்கோ என ஐயுறுவாரும். தனியே பதிப்பித்தாரும் உளர். ஆயின், கா. சு. அவற்றை அடிகள் வாக்கென்றே கொண்டு ஆய்கின்றமை தெளிவாகின்றது.

குமரி தொட்டு இமயம் வரை சென்றவர் அடிகள், மொழி பெயர் வேந்தை, அவர் மொழியாற் பிணித்தவர் அடிகள். பொறிக் குறையராய்ப் பிறந்தும் பொறி வளம் பெற்ற புகழர் அடிகள். வழிவழித் தொண்டு சிறக்கத் திருமடம் கண்டவர் அடிகள். பதிகம் பாடும் நிலை மாற்றி, நூற்றொண்டு கண்டவர் அடிகள். அறநெறி முதற்றே உலகென அறியுமாறு, நீதிநெறி வகுத்தவர் அடிகள். ஞான சம்பந்தருக்குப் பின்னர், தமிழை மேம்படக் கொஞ்சியவர் அடிகள்; அறுவகைச் சமயத்துள் ஒருமை கண்டவரும், பிற சமயத்தவரைப் பழியாமல் தம்பால் ஈர்த்த தவச் சால்பரும் அடிகள்; புலமைத் தலைக்கோலால் அளத்தற்கரும் புலமைச் செல்வர் அடிகள். இவற்றை இவ்வாய்வு வழியே பெறுதற்கு வாய்க்கின்றது.