உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 14.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114

இளங்குமரனார் தமிழ் வளம் 14

பற்றிக் கூறவேண்டுவதில்லை! மெய் வரலாறு கிட்டாமையாலேயே புனைவும் புராணக் கூட்டும் புகுந்தன என்பது எண்ணற் குரியதாம் (எ -டு ) புலவர் புராண புராணம், விநோதரச மஞ்சரி.

வரலாற்றை ஆராயும் கா. சு. “அக் காலத்தே ஆதீனங்களைச் சார்ந்த துறவிகள் நல்லொழுக்கத்திற் சிறந்து, இல்லறத்தாரால் பெரிதும் நன்கு மதிக்கப்பட்டமையால் அன்றோ ஆனந்தக் கூத்தர் தம் அருமைப் புதல்வரை நமதூர்க்கு வந்த சிவனடியார் பால் ஒப்புவிக்கப் பின் வாங்காதிருந்தனர். புதல்வராய் முனிவரது துறவுணர்ச்சியும் அதற்கு ஒரு காரணமே. இக் காலத்திலே அத்தகைய நன்மதிப்புடைய துறவிகளையும் அப்பெற்றித்தாய நற்றவ விருப்புடைய இளஞ் சிறாரையுங் காண்டலரிது என்கிறார். இதனை எழுதியது அரை நூற்றாண்டுக்கு முன்னர்! இற்றை நிலை?

وو

முனிவரது நூல்களின் சுருக்க ஆராய்ச்சி என்னும் மூன்றாம் பகுதியில் சிவதத்துவ விவேக ஆராய்ச்சி முதற் கண்ணது. வட மொழி அப்பய தீக்கிதிர் என்னும் பெருஞ் சைவரால் இயற்றப் பட்ட நூலின் மொழி பெயர்ப்பு சிவதத்துவ விவேகம். முனிவரது மொழி பெயர்ப்புத் திறம் விளக்குவது இந்நூல் என்கிறார் கா. சு. (20) வேதம் புராணம் இதிகாசம் மிருதி முதலிய எல்லாம் சிவபெருமானுக்கே கடவுட்டன்மை குறிக்கும் என்பது இந் நூலில் காட்டப் படுதலைச் சுட்டுகிறார். தீக்கிதிர் சிவாத்து விதசைவர்; அவரைச் சைவ சித்தாந்தி என்று கொள்ளல் தவறு என்பார் கா. சு.

அடுத்துச் சோமேசர் முதுமொழி வெண்பாவை ஆராய்கின்ற கா. சு. முனிவர் இயற்றிய நீதி நூல் ஒன்றே என்றும், அது சோமேசர் முதுமொழி வெண்பா என்றும் கூறுகிறார். அன்புடைமைக்கு நளனது மக்கட் காதலையும், விருந்தோம்பலுக்குப் பூவணப் பொன்னனையாளையும், அழுக்காறாமைக்கு அமணர் அழுக் காறுற்றுத் துன்புற்ற கதையையும் பிறவற்றையும் ஏற்றாங்கு விளக்கியும் சுட்டியும் செல்கிறார்.

"மக்களைப் பாடுதல் சிறந்த வழக்கன்று என்றாலும் செய்ந்நன்றி பாராட்டு முகத்தால் அவரைச் சிறப்பித்தல் பொருந்துமென்பார் ஔவையார் அசதிக் கோவை பாடியதை விதந்தனர்” என்றும், “சிவபெருமான் திருக்கோயிற்குரியதை அந்தணருக்குக் கொடுத்து ஓர் அரசன் துன்புற்றான் என்ற கதையை ஆசிரியர் வெஃகாமைக்கு உதாரணமாகக் கூறினர். மறையவரை நடமாடுங் கோயிலாகிய சிவனடியாராக முனிவர்