உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 14.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்க் ‘கா.சு.’ கலைக்களஞ்சியம் ஓ

113

என்றும், சிவனடிப் பேரன்பராய அவருடைய திருவடிகளை நினைவாரது பாவம் நாசமாம் பாவம் நாசமாம் என்றும் அறிவுறுத்துங் குறிப்பால் அவர் தோன்றிய திருப்பதி விக்கிரம சிங்கபுரமெனவும், பாவநாசமெனவும் பெயர் பெற்றிலங்கியது போலும்” எனத் தற்குறிப்பேற்ற அணிநயத்தின் வழியே ஊர்ப் பெயர்ப் பொருத்தம் காண்கிறார் (4).

இவ்வாறே தாளெடுத்துத் தலையசைத்தாடும் செங் கீரையைச் சைவம் ஒழிந்த பிறசமயம் கொள்ளேம் என மறுப்பது போன்றது என்றும், சப்பாணி கொட்டுவது உண்மைப் பொருளுணராது உரை எழுதுவாரைக் கண்டு நகையாடி க் கைகொட்டுவது போன்றது என்றும் தற் குறிப்பேற்றத்தி லேயே தொடர்வது பெரும் புலவர் பாடலுக்கு உரை வரைந்து செல்வதாக அமைகின்றது.

துறைசை (திருவாவடுதுறை) அடியார் சிலர் தம்மூர் வீதிக்கண் வருதலைக் கண்ட முக்களாலிங்கர் அவர்களைத் தம் இல்லத்தில் விருந்துண்ண விரும்பி அழைத்ததும், அவர்களுக்கு அன்னையும் அருவிருந்து படைத்ததும், தந்தையார், இல்லம் எய்தியதும் நிகழ்ந்ததை “அருந்ததி என் அம்மை” என்னும் வெண்பாவால் உரைத்ததும், தந்தையாரை அழைத்துக் கொண்டு அடியார்கள் தங்கியிருந்த மடத்திற்குச் சென்று, அவர்களோடு அளவளாவித் தாம் துறவு பூண்டு அவர்களோடு உறையும் வேட்கையுடையராதலை உரைத்ததும், இசையா

சைவால் பெற்றோர் இசையத் துறவோருடன், முக்களா லிங்கர் துறைசை எய்தியதும் துறைசைச் சின்னப்பட்டப் பின் வேலப்பரால் தீக்கையும் துறவும் அருளப் பெற்றுச் 'சிவஞான யோகிகள்' என்னும் துறவு நிலைப் பெயர் பெற்றதும், வட மொழி கற்றதும், பிறர்க்கு உதவு முகத்தான் ஈற்றடிப் பகுதி கொண்டு பாவொன்று தீட்டித் தந்து நூறு பொன் பரிசு பெறுவித்ததும், பெயர்ப்பும் பாட்டும் உரையும் கண்டனமுமாம் நூல்கள் இயற்றியதும், காலமும், கற்ற மாணவரும், முனிவரர் புகழும் ஆகியன வரலாற்றுப் பகுதியாய்க் கூறப்பட்டுள்ளன. வரலாற்றுக் குறிப்புகள் கிடைக்கவில்லை என்றும், கிடைத்த அளவும் வரலாற்று நூலால் கிடைத்ததே என்றும் அறிய முடிகின்றது. பதினெட்டாம் நூற்றாண்டின் இடை, கடைப் பகுதியிலே வாழ்ந்த முனிவரர் வரலாற்றுக் குறிப்பே இத் தகைத்தெனின் - புகழ் மிக்க திருமடத்தைச் சார்ந்து அந்நாளைச் சிவப் பெருங் குருவராய் விளங்கிய இருமொழிப் புலமையர் வரலாற்று நிலையே இத்தகைத்தெனின் - பிறர் வரலாற்றைப்

-