உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 14.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116

இளங்குமரனார் தமிழ் வளம் 14

எடுத்த மேற் கோள்கள் பலவுள' என்கிறார். முனிவர் கூற்றை நயமாக மறுத்துச் செல்லும் செலவு இது. கண்டிக்கத்தக்க கருத்தாக இருந்தும், முனிவர் மேலும் சிவநெறி மேலும் கா. சு. கொண்ட பற்றுமை இவ்வாறு நெகிழச் செல்கின்றது.

அந்தாதிகளின் ஆராய்ச்சி என்னும் உட்பிரிவில் குளந்தைப் பதிற்றுப் பத்தந்தாதி, இளசைப் பதிற்றுப் பத்தந்தாதி, கனசனசப் பதிற்றுப் பத்தந்தாதி என்னும் மூன்று அந்தாதிகளையும் ஆய்கின்றார். “யார்க்கும் எளிதில் விளங்கும் சொல் நடையும், இலக்கணத் திட்பமும் செவ்விய ஆற்றொழுக்கும் உடையனவாய் விழுமிய கருத்துக்களைத் தெரிவிக்கும் இயல்பின" எனப் பொதுமை நயம் புகல்கின்றார்.

மும்மூர்த்திகளுக்குத்

தலைவன், எண்

இறைவன் வடிவுடையவன் என்பவற்றைச் சான்றுகளால் நிறுவுகின்றார். திருவருட் சிறப்பு மிகுந்த இடம், அம்மையப்பர் வடிவம், நிட்டை, சைவ சித்தாந்த நுகர் யோகம், அடியார் பெருமை அடியாரை இகழாமை, பிள்ளையார், கூத்தப்பெருமான், மாலின் தொடர்பு, மன்னுயிர் இயல்பு இன்ன உட்டலைப்புகளிலெல்லாம் விரிவாக ஆய்கின்றார்.

சொல்லழகுகள் இந்நூல்களில்

பலவுண்மையைக் குறிப்பிடும் கா. சு. சிலவற்றை சுட்டுகிறார். அவற்றுள் ஒன்று.

h

"பார்ப்பதி யணங்கினொரு பாற்பதியு மெம்மான்” என்ற விடத்துப் பார்ப்பதி என்ற சொல்லொடு ஒத்த ஒலி நயமுடையதாய்ப் 'பாற்பதி' என்பது அமைந்து, 'பகுதியிலே பதிந்துள்ள' என்னும் பொருளைத் தந்ததனோடு அம்மையின் பகுதியாய் அப்பன் இருக்கின்றான் என்று கூறும் புது முறையும் புலனாதல் காண்க என்கிறார் (51).

பிள்ளைத் தமிழாராய்ச்சி என்னும் பகுதியில் செங்கழு நீர் விநாயகர் பிள்ளைத் தமிழ், அமுதாம்பிகை பிள்ளைத் தமிழ் என்னும் இரண்டையும் ஆய்கின்றார்.

றைவன் அகண்ட வடிவமுடை ய பரமானந்தப் பொருளாயவன் எனினும் அடியவர்களை ஆளுதற் பொருட்டு அருளுருக் கொண்டவிடத்து அவ்வுருவின் இளந் தோற்றத்தை நோக்கித் தொழும் நங்கைமார் கூறுமொழியாகச் செங்கழுநீர்ப் பிள்ளைத் தமிழ் இயம்பப்பட்டது என்றும், மனம் வாக்கிற் கெட்டாத சிற்சத்தியாகிய அம்மை மலையரையன் பாவையாகவும், பாண்டியன் புதல்வி தடாதகைப் பிராட்டியாகவும் திருவுருக்