உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 14.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்க் 'கா.சு.' கலைக்களஞ்சியம்

117

கொள்ளுதலால் அவ்வப்போதுகளில் அம்மையின் அணுக்கத் தொண்டராய் சேடியர்கள் அவளது இளவனப்பைப் பற்றிப் புகழ்ந்து பாடும் பிள்ளைக் கவியாக அமுதாம்பிகை பிள்ளைத் தமிழ் இயற்றப்பட்டது என்றும் நூல் இயற்றப்பட்ட நோக்கை நுணுகி உரைக்கின்றார்.

மும்மலமாகிய மதம் பிடித்து, அறிவாகிய கட்டுத் தறியைப் பிடுங்கி எறிந்து, அன்பாகிய சங்கிலியை உதறித் தள்ளிப் பெரியாரவையாகிய கூடத்தினின்றும் விலகிப் போய்ப் புவனங்களாகிய கடுவனங்களில் அலைந்து எத்தகையரான பாகர்க்கும் அடங்காதவனாய் இயங்கும் உயிர் யானைகள் ஆனை முகவனாகிய நின்னைப் பார்த்து தம்மைப் பிணிப்ப தற்குப் பாசமும் தோட்டியும் தாங்குவதை அறியாது, தம்மைப் போல உன்னையுங் கருதி உன்பாற் சாருமவைகளைப் பார்த்து நீ கைகொட்டிச் சிரிப்பது போலச் சப்பாணி கொட்டி யருள்க என்று கூறும் உருவகக் காட்சியை எடுத்துக் காட்டுகிறார் கா. சு. பிள்ளையார் சிறப்பு, பூசனை, நீதி நூற் கருத்துகள் உயர்வு நவிற்சி. இரட்டுற மொழிதல் இன்னவற்றை நயந்துரைக்கிறார். முனிவர் தம் நகைச்சுவைச் சிறப்பாகக் காட்டுவனவற்றுள் ஒன்று:

“உன்னை விருந்திற்கு அழைக்க வேண்டும் எனக் கருதும் போதில் இவண் நீயே விரும்பி வந்தாய் என்றெண்ணி மகிழ்ச்சி மீக்கூர்ந்து நாங்கள் முறுவல் பூத்தோமே ஒழிய உன் யானை முகமும் பூதப் பெருவயிறும் குறுகிய தாளால் நடக்கும் வேடிக்கை நடையும் பார்த்து நகைத்திலேம். கலைசையில் உலாவும் சிறுவா எங்கள் சிற்றில் சிதையேல்" என்பது செங்கழு நீர் விநாயகர் பிள்ளைத் தமிழ் சார்ந்தது.

"திருவேகம்பரந்தாதி, திருமுல்லை வாயிலந்தாதி என்ப வற்றுள் முன்னது மடக்கும், பின்னது திரிபும் உடையது என்பதைச் சுட்டி ஒவ்வோர் எடுத்துக் காட்டுக் காட்டுகிறார். திருவேகம்பர் ஆனந்தக் களிப்புள் ஒன்று முதலாகப் பத்து வரை யுள்ள எண்களை அவ்வத் தொகைகளையுடைய பொருள்களைக் குறிக்கும் வண்ணம் பாடியதையும் அகிலாண்டேசுவரி பதிகத்தில் சாத்திரக் கருத்துகள் மலிவதையும், பஞ்சாக்கர மாலை நமச்சிவாய மூர்த்திகளின் சைவ சித்தாந்த உபதேசத் தனிப் பெருஞ் சிறப்பைக் கூறுவதையும் குறிக்கிறார்.

கருவி நூல்களின் ஆராய்ச்சியில், தலை நிற்பது “தொல் காப்பியப் பாயிர விருத்தியும் முதற் சூத்திர விருத்தியும்” என்ப தாகும். இதில் “குமரி என்பது குமரியாறே மலையன்று என்றும், “முந்து நூல் அகத்தியமே” என்றும் ஐந்திரம் வட